உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் இரயில் எனப் பரப்பப்படும் இத்தாலி இரயிலின் புகைப்படம் !

பரவிய செய்தி

உத்திரபிரதேசத்தின் லோக்கல் ரயில்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் தலைவர் டி.ரூபின் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் இரயில் ” எனக் கூறி இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அவரின் பதிவை தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் லைக் செய்தும் இருக்கிறார்.

உண்மை என்ன ? 

பாஜகவினர் பகிர்ந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அதே மாதிரியான இரயிலின் வேறொரு புகைப்படம் 2022 மார்ச் 22ம் தேதி புகைப்பட விற்பனை தளமான Alamy-ல் வெளியாகி இருக்கிறது.

அதில், இத்தாலியின் வெனிஸில் உள்ள மெஸ்ட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நுவோ ட்ராஸ்போர்டோ வியாகியோடோரியின்(Nuovo Trasporto Viaggiatori-NTV) அதிவேக ரயில் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பகிரப்படும் புகைப்படத்திலும் இரயிலின் முன்பாக NTV என எழுதப்பட்டு இருக்கிறது. நுவோ ட்ராஸ்போர்டோ வியாகியோடோரி(NTV) எனும் தனியார் நிறுவனம் இத்தாலி நாட்டில் அதிவேகமான இரயிலை இயக்கி வருகிறது.

” உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் ரயில்” எனும் பதிவை முதலில் கு.அண்ணாமலை ஆர்மி எனும் ட்விட்டர் பக்கம் பதிவிட்டு உள்ளது. இது பாஜகவினரை ட்ரோல் செய்யும் வகையில் இயங்கும் பரோடி பக்கம். 

மேலும் படிக்க : குஜராத் அரசு மருத்துவமனை என சிங்கப்பூர் ஓட்டலின் படத்துடன் வைரலாகும் நையாண்டிப் பதிவு !

இதற்கு முன்பாக, இதே பக்கத்தில் வெளியான நையாண்டிப் பதிவை பாஜகவினர் உண்மை என நினைத்து சமூக வலைதளங்களில் பரப்பியது குறிப்பிடத்தக்கது

முடிவு : 

நம் தேடலில், உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் இரயில் எனப் பரப்பப்படும் புகைப்படம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தால் இயக்கப்படும் அதிவேக இரயில் என அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader