திமுக விசிக மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சாதிவெறியை நிறுத்த வேண்டும் என்றாரா வைகோ ?

பரவிய செய்தி

அதிகாரம் கையில் இருப்பதால் திமுக விசிக மேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சாதிவெறியை நிறுத்திக்கொள்ள வேண்டும் – திரு.வைகோ

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

வைகோ அவர்கள், ” அதிகாரம் கையில் இருப்பதால் திமுக விசிக மேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சாதிவெறியை நிறுத்திக்கொள்ள வேண்டும் ” என கூறியதாக நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

சேலம் மாவட்டம் கே.மோரூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் அமைப்பதற்கு கோரிக்கை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே அனைத்துக் கட்சி கொடிக்கம்பங்கள் இருக்கும் இடத்தில் கொடி கம்பம் அமைக்க முயற்சித்தனர். அப்போது காவல்துறை விசிகவினர் மீது நடத்திய தடியடி, கைது நடவடிக்கை என பிரச்சனை பெரிதாகியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த சம்பவத்தை மையப்படுத்தி வைகோ திமுக அரசிற்கு எதிராக இப்படியொரு கருத்தைக் கூறியதாக இந்த நியூஸ் கார்டை பரப்பி வருகிறார்கள். ஆனால், திமுக அரசு குறித்து வைகோ இப்படியொரு கருத்தைக் கூறியதாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை.
” 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு ” என வைகோ புகைப்படத்துடன் செப்டம்பர் 15-ம் தேதி வெளியான நியூஸ் கார்டில் எடிட் செய்து போலியான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
முடிவு : 
நம் தேடலில், அதிகாரம் கையில் இருப்பதால் திமுக விசிக மேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சாதிவெறியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வைகோ கூறியதாக பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.
Please complete the required fields.




Back to top button