வன்னி அரசு பற்றி திருமாவளவன் சொன்னதாக பரப்பப்படும் போலியான அவதூறு செய்தி!

பரவிய செய்தி

தம்பி வன்னியரசுக்கு மூளை பிதற்றல் ? தான்தோன்றி தனமாக சமூக வலைதளங்களில் வன்னியரசு பதிவிடும் கருத்துகளால் விசிகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி தருகிறார் என்பதை அறிந்தேன். தொடர்ந்து விசாரித்த போது அவருக்கு மூளை பிதற்றல் நோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்றேன் – சிதம்பரம் எம்.பி தொல்.திருமாவளவன் பேட்டி.

மதிப்பீடு

விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வன்னி அரசு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிர ஈடுபாட்டுடன் இருப்பவர். வன்னி அரசின் ட்விட்டர் பதிவுகளில் பெரும்பாலும் பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியை விமர்சித்ததாக இருக்கும்.

இந்நிலையில், வன்னி அரசு அவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதால் சமூக வலைதளங்களில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பதிவிட்டு வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியது போல் ஓர் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன  ? 

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தந்தி முகநூல் பக்கத்தில் தேடுகையில், ” ஜூன் 27-ம் தேதி அப்படி எந்த நியூஸ் கார்டு பதிவாகவில்லை. மேலும், தந்தி டிவி நியூஸ் கார்டுக்கும், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டுக்கும் வேறுபாடுகள் இருப்பதை கவனிக்க முடிந்தது.

வன்னி அரசு பற்றி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இப்படியொரு கருத்தைக் கூறியதாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை. சமீபத்தில், எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் வேட்புமனு தாக்கலின் போது எம்.பி திருமாவளவனுக்கு இருக்கை அளிக்காமல் ஓரமாய் நிற்க வைத்ததாக பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர் என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : எம்.பி திருமாவளவனுக்கு இருக்கை அளிக்காமல் ஓரமாக நிற்க வைத்ததாக வதந்தி பரப்பும் தினமலர் & பாஜகவினர் !

நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாக கூறி திருமாவளவன் பற்றிய கட்டுரையுடன் வன்னி அரசு ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், வன்னியரசுக்கு மூளை பிதற்றல், சமூக வலைதளங்களில் வன்னியரசு பதிவிடும் கருத்துகளால் விசிகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக என திருமாவளவன் கூறியதாக பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader