This article is from Jun 30, 2021

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்டதாக பரவும் வீடியோ| உண்மை என்ன ?

பரவிய செய்தி

புதுப்பிக்கப்பட்ட வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில்..

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்ட பிறகு கோவிலின் தோற்றம் என 2.47 நிமிட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. இந்த வீடியோ இந்திய அளவில் வைரலாகும் ஒன்றாக இருக்கிறது.

உண்மை என்ன ?

வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்டதாக பரவும் வீடியோ குறித்து தேடுகையில், 2020 மே மாதம் பிளான்னர் இந்தியா எனும் யூடியூப் சேனல் ஒன்றில் வாரணாசியில் மணி மந்திர் எனும் கோவில் பணிகள் சமீபத்தில் முடிவடைந்ததாக இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.

2020 பிப்ரவரி 24-ம் தேதி ZNDM News எனும் யூடியூப் சேனலில் இதே கோவிலின் மற்றொரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

பிளான்னர் இந்தியா எனும் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், வாரணாசியில் உள்ள மணி மந்திர் கோவில் பிளான்னர் இந்தியாவால் வடிவமைக்கப்பட்டது. இது புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் என பொய்யான செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது ” என ஜூன் 2-ம் தேதி பதிவிட்டு உள்ளனர்.

Twitter Archive link 

முடிவு :

நம் தேடலில், புதுப்பிக்கப்பட்ட வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில் என பரவும் 2.47 நிமிட வீடியோ வாரணாசியில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட மணி மந்திர் எனும் கோவில் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader