விஜயின் வாரிசு பட ஃபர்ஸ்ட் லுக் ஓட்டோ விளம்பர போஸ்டரை காப்பி அடித்ததாக வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தெலுங்குப்பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியது. வாரிசு எனப் பெயரிடப்பட்டுள்ள விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் துல்கர் சல்மான் நடித்த ஓட்டோ விளம்பரத்தின் போஸ்டரைக் காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக இரண்டையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
#என்றும்_தலஅஜித் pic.twitter.com/MKxS3CWMJn
— solomonKNIGHT (@SolomonKnight15) June 21, 2022
ஆஹ்!!!! இது அதுல 🤩😂😂! #vikram #Varisu pic.twitter.com/HrzWpE0TOU
Advertisement— @Aanadavar Trendz🍥 (@AandavarTrends) June 21, 2022
உண்மை என்ன ?
ஜூன் 21-ம் தேதி நடிகர் விஜயின் அதிகாரப்பூர்வ அலுவலக ட்விட்டர் பக்கம், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் ட்விட்டர் பக்கத்தில் வாரிசு படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதை இயக்குனர் வம்சி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தும் இருந்தார்.
#Varisu pic.twitter.com/b2bwNNAQP8
— Vijay (@actorvijay) June 21, 2022
துல்கர் சல்மானின் ஓட்டோ விளம்பரத்தின் போஸ்டர் எனப் பரப்பப்படும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், விஜயின் வாரிசு படத்தின் போஸ்டரே கிடைத்தன. மேலும், வாரிசு போஸ்டரில் விஜயின் தலைக்கு பதிலாக ஓட்டோ விளம்பர போஸ்டரில் இடம்பெற்ற துல்கரின் தலையை மட்டும் எடிட் செய்து மாற்றி இருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பாக நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டைட்டில் கார்டு வெளியிடப்பட்டது. அந்த டைட்டில் கார்டின் பின்னணியில், பெல்ஜியத்தில் உள்ள ஸ்டீல் மில் படத்தை பயன்படுத்தி உள்ளதாக விமர்சனத்துக்கு உள்ளானது.
இதையடுத்து, விஜயின் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான உடன், doheny eye institute இணையதளத்தில் வெளியான படத்தை வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பயன்படுத்தி உள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் துல்கர் சல்மான் நடித்த ஓட்டோ விளம்பரத்தின் போஸ்டரை காப்பி அடித்ததாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. விஜயின் படத்தில் துல்கர் சல்மான் படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.