விசிக கட்சியினர் நேதாஜி சிலையை அவமதித்து வீடியோ எடுத்ததாகப் பரப்பப்படும் பொய்

பரவிய செய்தி
விசிக கட்சியினர் நம் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை. அவமானப்படுத்தி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.தமிழக அரசாங்கம் இவரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாகவே வலதுசாரி மற்றும் சாதிய இயக்கங்களால் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை விசிக கட்சியினர் அவமானப்படுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
விசிக கட்சியினர் நம் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை. அவமானப்படுத்தி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.தமிழக அரசாங்கம் இவரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். pic.twitter.com/8sNAV6daTq
— RAMGEECRR (@ramgeecrr) March 13, 2023
உண்மை என்ன ?
விசிக கட்சியினர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை அவமரியாதை செய்ததாக கூறப்படும் வீடியோவின் உண்மைத்தன்மையை குறித்து ஆராய்ந்த போது, அந்த வீடியோவில் பேசும் நபர் ஹிந்தியில் உரையாடுவதைக் கேட்க முடிந்தது.
தொழில்நுட்பம் வாயிலான வீடியோவை குறித்த தேடலில், அந்த நிகழ்வு சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் சார்கண்டா என்னும் பகுதியில் 16 வயது சிறுவன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில் நின்று புகைப்பிடித்தும், சிலைக்கு சிகரெட் கொடுப்பது போன்றவும் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய பின் புகார்கள் எழுந்ததால், இந்த நிகழ்வை காட்சிப்படுத்திய மற்றொரு சிறுவன் போலீசாரிடம் தகவல் தெரிவித்ததின் பேரில் சிலையை அவமதித்தவர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக அம்மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ANIக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்வு குறித்து சில ஆங்கில ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் படிக்க : திருமாவளவனை தரையில் உட்கார வைத்தாரா ஸ்டாலின் ?| ஃபேஸ்புக் பதிவு.
இதேபோல், எம்பி திருமாவளவனை மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்ததாக எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதுகுறித்து நாம் முன்பே கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், விசிக கட்சியினர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை அவமதிப்பதாகப் பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. அது சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் சார்கண்டாவில் நடந்தது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.