This article is from Mar 25, 2021

சாதிய ரீதியாக பெண்களை குறிப்பிட்டு போலிப் பதிவு.. விசிக வன்னி அரசின் எடிட் செய்த ட்வீட் !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

திமுகவின் தேர்தல் அறிக்கையில், கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் பட்டியலினத்தை சேர்ந்தவராக இருந்தால் ரூ60,000 பணம் மற்றும் தாலிக்கு 1 பவுன் தங்கம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தபடும் என அறிவித்து இருந்தனர். இதை சாதி ரீதியாக சமூக வலைதளங்களில் தவறாக பரப்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அதே திட்டத்தை குறிப்பிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு பிற சமூகத்தின் பெண்களை பற்றி இப்படியொரு ட்வீட் பதிவை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகிறார்கள்.

Facebook link | Archive link 

உண்மை என்ன ?

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வானூர் தொகுதியில் வன்னி அரசு போட்டியிடுகிறார். அவரின் ட்விட்டர் பக்கத்தை ஆராய்கையில், 6 நாட்களுக்கு முன்பாக, ” வானூர் தொகுதியில் என்னை ஆதரித்து கவிஞர் அறிவுமதி வாக்கு சேகரித்தார். இன்று கவிஞர் நேரில் வாழ்த்தினார் ” என இரு புகைப்படங்களுடன் ட்வீட் செய்து இருந்திருக்கிறார்.

Twitter link | Archive link 

அந்த ட்வீட் பதிவில் தவறான கருத்தை எடிட் செய்து வன்னி அரசு பிற சமூக பெண்கள் குறித்து தவறாக பதிவிட்டதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், விசிகவின் வேட்பாளர் வன்னி அரசு திமுகவின் கலப்பு திருமண திட்டத்தைக் குறிப்பிட்டு பிற சமூக பெண்களை பற்றி தவறான கருத்தை ட்வீட் செய்ததாக பரப்பப்படும் ட்வீட் பதிவு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader