100 கோவில் சிலைகளையாவது உடைத்தெறிவோம் என கி.வீரமணி கூறியதாக வதந்தி !

பரவிய செய்தி
ஒரு பெரியார் சிலை அகற்றப்பட்டால் பதிலடியாக 100 கோவில் சிலைகளையாவது உடைத்தெறிவோம் – கி.வீரமணி சூளுரை
மதிப்பீடு
விளக்கம்
திராவிடர்க் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, ” ஒரு பெரியார் சிலை அகற்றப்பட்டால் பதிலடியாக 100 கோவில் சிலைகளையாவது உடைத்தெறிவோம் ” எனக் கூறியதாக போலியான புதியதலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
பெரியார் சிலை அகற்றப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம் மற்றும் ஒரு பெரியார் சிலை அகற்றப்பட்டால் பதிலடியாக 100 கோவில் சிலைகளையாவது உடைத்தெறிவோம் ஆகிய வாக்கியங்களை கொண்டு தேடுகையில் புதியதலைமுறை மட்டுமின்றி எந்தவொரு ஊடகத்திலும் அவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.
பரப்பப்படும் போலியான நியூஸ் கார்டில் 04-03-2019 என கடந்த ஆண்டு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த தேதிலோ அல்லது பிற தேதிலோ அப்படியொரு நியூஸ் கார்டு நமக்கு கிடைக்கவில்லை. புதிய தலைமுறை நியூஸ் கார்டில் ஃபோட்டோஷாப் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள் என தெளிவாய் தெரிகிறது.
மேலும் படிக்க : கி.வீரமணி நடத்தி வைத்த பேத்தி திருமணம் என வைரலாகும் வீடியோ உண்மையா ?
அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்பட பலரும் கூறாத கருத்துக்களை கூறியதாக போலியான நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகின்றன என்பதை தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம். கி.வீரமணி சார்ந்து போலிச் செய்திகள் சமூக வலைதளத்தில் வைரல் செய்யப்பட்டன. அதேபோல், செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகள் அதிகம் ஃபோட்டோஷாப் செய்யப்படுகின்றன என்பது குறித்த புரிதல் மக்களிடம் உண்டாக வேண்டும்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.