This article is from Sep 30, 2017

விக்ஸ் வபோரப் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டதா ?

பரவிய செய்தி

விக்ஸ் வபோரப் நச்சு தன்மை உடையது என்று அறிவித்துள்ளார்கள் . மேலும் இதை அமெரிக்காவில் தடையும் செய்துள்ளனர் .

மதிப்பீடு

சுருக்கம்

அமெரிக்க இணையதளங்களில் இன்று வரை விற்பனை செய்து வருகின்றனர் . விக்ஸ் பொருள்களை பயன்படுத்தும் முன் விதிமுறைகளை படித்தப் பிறகு உபயோகிக்கவும் .

விளக்கம்

விக்ஸ் என்று இந்தியாவில் பரவலாக காணப்படும் வலிநிவாரணி தான் விக்ஸ் வபோரப் . இவை பெரும்பாலும் சளி , மூக்கடைப்பு , இடுப்பு மற்றும் கை , கால்களுக்கு வலிநிவாரணியாக பயன்படுத்துகின்றனர் . குறிப்பாக குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் விக்ஸை உடலில் தடவிக்கொள் என்று கூறுவார்கள் . பல வகைகளில் விக்ஸ் பொருள்கள் விற்கப்படுகின்றது .

இப்படி இருக்கையில் சில வருடங்களாக விக்ஸ் வபோரப் நச்சு தன்மையுடையது என்று உலக சுகாதார அமைப்பில் புகார்கள் எழுந்துள்ளது என்றும் , அமெரிக்காவில் விக்ஸ் வபோரப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறிச் சில செய்திகள் பரவி வருகின்றன .

நச்சு தன்மையுடையது என்று தடை செய்திருந்தால் இணையத்தில் விற்பனை செய்யப மாட்டார்கள் . அமெரிக்காவின் பல இணைய தளங்களில் விக்ஸ் பொருள்கள் இன்றும் விற்பனை செய்து வருகின்றனர் . விக்ஸ் வபோரப்வில் நச்சு தன்மை இல்லை என்றாலும் உபயோகப்படுத்தும் முன் சில விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியமாகும் .

விக்ஸ் வபோரப்யை சிறுக் குழந்தைகள் மற்றும் இரண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது . விக்ஸ் பொருள்களை மூக்கு துளைகள் அல்லது குழந்தைகள் வாயில் வைக்காதவாறு குழந்தைகளிடம் இருந்து தள்ளி வைக்க வேண்டும் . உடலில் அடிபட்டால் கட்டு போடும் போது விக்ஸ் போன்ற பொருள்களை பயன்படுத்தக் கூடாது . இதனால் உடலின் தோல்கள் பாதிப்பு அடையலாம் . மூக்கு துளைகள் மற்றும் மூக்கின் அடிப்பகுதியில் இதை தடவக்கூடாது . சளி பிடித்துக் கொண்டால் விக்ஸ் வபோரப்யை தொண்டை பகுதி மற்றும் நெஞ்சுப் பகுதியில் தடவ வேண்டும் , உடலில் வலி ஏற்பட்டால் தசைப் பகுதிகளில் தடவிக் கொள்ளலாம் . இதனால் வலிகள் குறைய வாய்ப்புள்ளது .

விக்ஸ் வபோரப்யை பயன்படுத்தும் முன் அதில் உள்ள அறிவுரைகளை அறிந்துகொள்வது அவசியமாகும் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader