இயக்குநர் மகிழ் திருமேனி ‘விடாமுயற்சி’ அப்டேட் கொடுத்ததாக போலி ட்விட்டர் ஐடி பதிவை வெளியிட்ட ஊடகங்கள் !

பரவிய செய்தி
அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஆகஸ்ட் 03-இல் வெளியாகும் என இயக்குநர் மகிழ் திருமேனி ட்வீட்
மதிப்பீடு
விளக்கம்
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வருகின்ற ஆகஸ்ட் 03 அன்று அறிவிக்கப்பட உள்ளதாக இயக்குனர் மகிழ் திருமேனி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்ததாகக் கூறி News7 தமிழ், தந்தி டிவி, IBC தமிழ், i தமிழ் நியூஸ், பத்திரிகை.com போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உண்மை என்ன ?
சமூக ஊடகங்களில் பரவி வரும் ட்வீட் குறித்து தேடியதில், @MagizhDirector என்றும், @MagizhDiroffl என்றும் இயக்குனர் மகிழ் திருமேனியின் பெயரில் இரண்டு ட்விட்டர் பக்கங்கள் செயல்படுவதைக் காண முடிந்தது.
இதில் @MagizhDirector என்ற ட்விட்டர் பக்கத்தில் இருந்து தான் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வருகின்ற ஆகஸ்ட் 03 அன்று வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
August 3rd !⏳ #VidaaMuyarchi #AjithKumar pic.twitter.com/rBbzYrhhoA
— Magizh Thirumeni (@MagizhDirector) July 12, 2023
எனவே, இதுகுறித்து மேலும் தேடியதில், Done Channel என்ற அதிகாரப்பூர்வ சினிமா செய்தியின் ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி குறித்த அறிவிப்பை காண முடிந்தது. அதில் “இயக்குநர் மகிழ் திருமேனி எந்தவொரு சமூக ஊடக பக்கத்திலும் இல்லை. அவர் பெயரில் இருக்கும் போலி கணக்குகளிலிருந்து வரும் செய்திகளைத் தவிர்க்குமாறு ஊடகங்கள், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Dear All
It is hereby declared that Director Magizh thirumeni is not in any social media requesting the media ,fans and the general audience to avoid and ignore messages from any fake accounts.
— Done Channel (@DoneChannel1) February 21, 2023
அவர் பெயரில் தற்போது இருக்கும் இரண்டு கணக்குகள் குறித்து மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், அவை போலி கணக்குகள் என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
Welcome Actor @iYogiBabu On Board For Our Film. Have A Great Job Brother 🙂#ValimaiFirstLook Very Soon !
Stay Tuned…#Valimai— Magizh Thirumeni (@MagizhDirector) February 23, 2020
வைரல் செய்யப்படும் படத்தின் போஸ்டரில் @Manav Designz என வாட்டர் மார்க் உள்ளது. அதுகுறித்து தேடுகையில், @Itz_Manav_23 எனும் ட்விட்டர் ஐடி ஜூலை 11ம் தேதி இப்போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
And Here Comes …..#VidaaMuyarchi
Simple Poster Design ⚡#Ajithkumar pic.twitter.com/0LCJwLZ6ba
— Manavᵛᶦᵈᵃᵃᴹᵘʸᵃʳᶜʰᶦ (@Itz_Manav_23) July 11, 2023
போலி ட்விட்டர் பக்கத்தில் வெளியான அறிவிப்பை உண்மை என்று நம்பி News7 தமிழ், தந்தி டிவி, IBC தமிழ், i தமிழ் நியூஸ், பத்திரிகை.com போன்ற தமிழ் ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் படிக்க: நடிகர் அஜித் குமாரின் எடிட் செய்யப்பட்ட படத்தை ட்விட்டரில் பதிவிட்ட அமர் பிரசாத் !
இதற்கு முன்பும் நடிகர் அஜித் குமார் குறித்து ட்விட்டரில் போலியாக பல செய்திகள் பரவின. அதனையும் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: நடிகர் அஜித் குமார் பகாசூரன் திரைப்படத்தை பாராட்டியதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !
முடிவு:
நம் தேடலில், விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வருகின்ற ஆகஸ்ட் 03 அன்று அறிவிக்கப்பட உள்ளதாக இயக்குனர் மகிழ் திருமேனி அறிவித்ததாகப் பரவி வரும் ட்வீட் போலியானது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.