சென்னை வெள்ளத்தால் சூப்பர் மார்க்கெட்டில் மீன்கள் நீந்துவதாகப் பரவும் ஜார்ஜியா வீடியோ !

பரவிய செய்தி


சென்னை வெள்ளத்தில் சூப்பர் மார்க்கெட்..

X Post Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த டிசம்பர் 3 அன்று தொடங்கிய பெரும் மழை, கடந்த டிசம்பர் 4 இரவு வரை சென்னையைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை வெள்ளத்தால் சூப்பர் மார்க்கெட்டில் மீன்கள் மிதக்கின்றன என்று கூறி 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில் மீன்கள் சூப்பர் மார்கெட்டின் தரை தளத்தில் மிதப்பது போன்றும், அதை ஊழியர்கள் வலைகளைக் கொண்டு பிடிப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது சென்னையில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.

மேலும் இந்த வீடியோ ViralHog என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த 2018 பிப்ரவரி 5 “சூப்பர் மார்க்கெட் தளத்தில் மீன் நீச்சல் || வைரல்ஹாக்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவின் விளக்கத்தில் “பிப்ரவரி 2, 2018 அன்று இது ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசியில் நடந்துள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று பிரிட்டனைச் சேர்ந்த dailymail என்ற வலைத்தளப் பக்கத்திலும் இந்த வீடியோ குறித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஜார்ஜியாவின் திபிலிசி நகரில் அமைந்துள்ள கேரிஃபோர் சூப்பர் மார்க்கெட்டில் மீன் தொட்டி ஒன்று உடைந்ததால், மீன்கள் தரையைச் சுற்றி உதவியற்ற நிலையில் ஓட ஆரம்பித்தன. பின்னர் ஊழியர்கள் வலைகளில் அவற்றைப் பிடிக்க தீவிரமாக முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.”என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் 2015-ல் தான் அதிக மழை பெய்தது என தவறான தகவலைப் பரப்பும் ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் !

இதற்கு முன்பும், சென்னை வெள்ளம் குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: சென்னையில் 2023ம் ஆண்டை விட 2015ல் இரண்டு மடங்கு அதிக மழை பெய்ததாக அதிமுகவினர் பரப்பும் தவறான தகவல் !

மேலும் படிக்க: மிக்ஜாம் புயலில் நிலநடுக்கம் எனப் பரவும் மியான்மரில் மோச்சா புயலில் எடுத்த வீடியோ!

முடிவு:

நம் தேடலில், சென்னை வெள்ளத்தால் சூப்பர் மார்க்கெட்டில் மீன் நீந்துகின்றன எனப் பரவும் வீடியோ, ஜார்ஜியா நாட்டில் உள்ள சூப்பர் மார்கெட்டில் கடந்த 2018-ன் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader