சென்னை மழையில் தெர்மாகோலில் பயணம் செய்யும் நபர் எனப் பரவும் குஜராத் வீடியோ !

பரவிய செய்தி
சென்னையில் தூக்கி போட்டாலும் தெர்மாகோலாக மிதப்பேன் அதில் ஏறி நீங்க பயணம் செய்யலாம்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால் இன்னும் சில நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தால் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் பெய்துவரும் மழையின் காரணமாக சாலைகளில் தேங்கிய மழைநீரில் தெர்மாகோல் மூலம் ஒருவர் மிதந்து பயணம் செல்கிறார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினர் மற்றும் அதிமுகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
#சென்னையில் தூக்கி போட்டாலும்
தெர்மாகோலாக மிதப்பேன்
அதில் ஏறி நீங்க பயணம் செய்யலாம்…😃😃😃🌊🚣♂️🚣♂️🚣♂️🚣♂️ pic.twitter.com/C5lyHcFLnf— Savukku Shankar Army (@Mahi1987Mass) November 14, 2023
#சென்னையில் தூக்கி போட்டாலும் #தெர்மாகோலாக மிதப்பேன் அதில் ஏறி நீங்க பயணம் செய்யலாம்… 😃😃😃🌊🚣♂️🚣♂️🚣♂️ pic.twitter.com/mANHjEAfxV
— Praveen Kumar G.L (@praveen_kgl) November 15, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் பரவி வரும் வீடியோ கடந்த ஜூலை மாதத்திலிருந்தே குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்ததையும் காண முடிந்தது.
A viral video from Gujrat. #Rain #Flashflood #Gujrat #India #Viralvideo pic.twitter.com/jSX592ade0
— Zaitra (@Zaitra6) July 1, 2023
Punjab Kesari ஊடகம் இந்த வீடியோ குறித்து கடந்த ஜூலை ௦2 அன்று “நடுரோட்டில் வெள்ளத்தில் தெர்மாகோல் எடுத்து ஒருவர் இப்படிச் செய்துள்ளார், இதைப் பார்த்தால் சிரிக்கத் தொடங்குவீர்கள்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கவலையடைந்துள்ளனர். அங்கு வைரலாகி வரும் வீடியோவில், ஒரு நபர் பெரிய தெர்மாகோல் மீது படுத்துக் கொண்டு தண்ணீர் ஓடும் திசையில் நகர்ந்துள்ளார்.” என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இதே போன்று Zee news ஊடகமும், வைரலாகி வரும் இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று கூறி செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் abplive-ன் பக்கத்திலும் இந்த வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “கனமழை காரணமாக சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குஜராத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வேடிக்கையான வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.” என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டின் சாலை எனத் தெலங்கானா வீடியோவைப் பரப்பும் அதிமுகவினர் !
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம் எனப் பரவும் 9 வருட பழைய புகைப்படம் !
முடிவு:
நம் தேடலில், சென்னை மழையின் காரணமாக சாலையில் தேங்கிய நீரில் ஒருவர் தெர்மாகோலில் பயணம் செய்வதாகப் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதையும், இந்த வீடியோ குஜராத் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.