ராஜஸ்தான் முதல்வர் பிரச்சாரத்தில் மக்கள் ‘மோடி மோடி’ என கோசமிட்டதாக எடிட் செய்த வீடியோவைப் பரப்பிய அசாம் முதல்வர்

பரவிய செய்தி

மோடி ஜி நிச்சயம் – மோடி மட்டுமே வருவார்..

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

மத்திய பிரதேசத்தில் பாஜக, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ், தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி, மிசோரம் மாநிலத்தில் மிசோ நாகா முன்னணி ஆகிய கட்சிகள் தற்போது ஆட்சியில் இருந்து வருகின்றன. இந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டு, மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான தேர்தல்கள் தற்போது வரை நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில் “ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு உள்ள மக்கள் “மோடி மோடி” என்று கூச்சலிடுவதைப் பாருங்கள்” என்று கூறி 17 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை News18 Bihar சேனல் உட்பட, பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

அசாம் மாநில முதலமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், “மோடி ஜி வருவது நிச்சயம், மோடி தான் வருவார்” என்று குறிப்பிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவு செய்திருந்ததையும் காண முடிந்தது.

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ வருகின்ற நவம்பர் 25 அன்று நடைபெறவுள்ள ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்காக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ, அசோக் கெலாட்டின் யூடியூப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோவின் 2:20 நிமிடத்தில் சரியாக பொருந்தியது. டோங்க் மாவட்டத்தில் உள்ள மால்புராவில் நடைபெற்ற பிரச்சாரத்தில், அவர் தன்னுடைய ஏழு வாக்குறுதிகள் குறித்து பேச ஆரம்பிப்பதற்கு முன்பு, பொது மக்கள் சத்தம் எழுப்பியதால் “கேளுங்கள், கேளுங்கள்” என்று அவர் கூறுவதையும், அதை அவருக்கு அருகில் இருக்கும் வேட்பாளரும் சைகையில் செய்வதையும் காண முடிந்தது.

ஆனால் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில் இருப்பது போன்று, இதன் உண்மையான வீடியோவில் அசோக் கெலாட் பேசும் போது பொதுமக்கள் “மோடி மோடி” என்று கூச்சலிடவில்லை. இந்த வீடியோ தவறாக எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதனை உண்மை என்று நம்பி அசாம் முதலமைச்சரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் படிக்க: ஸ்மிருதி இரானியை காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் ஆபாசமாகப் பேசியதாக எடிட் வீடியோவைப் பரப்பிய பாஜகவின் அமித் மாள்வியா !

மேலும் படிக்க: மல்யுத்த வீரர்கள் கைதுக்கு பின் சிரித்து செல்ஃபி எடுத்ததாக பாஜகவினர் பரப்பிய எடிட் படம்.. வீடியோவில் என்ன பேசினார் ?

முடிவு:

நம் தேடலில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசும் போது பொதுமக்கள் “மோடி மோடி” என்று கூச்சலிட்டதாக அசாம் முதல்வர் பரப்பிய வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader