பாஜக ஆதரவாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதாகப் பரவும் பொய் செய்தி!

பரவிய செய்தி

வாக்கு இயந்திரத்தை பாணி பூரி மாதிரி தூக்கிட்டு போராநுக வடக்கன்ஸ்.. இப்படி தேர்தல் நடத்தினால் பிஜேபி 400 இல்ல, 4000 சீட் கூட ஜெய்க்கும்

X Link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், தேர்தலுக்கு பயன்படுத்தி வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஒரு வாகனத்தில் கொண்டு செல்வதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

X Link 

உண்மை என்ன ?

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இது தற்போது நிகழ்ந்ததில்லை என்பதும் இயந்திரங்கள் வாக்குப்பதிவின் போது பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க கொண்டு செல்லப்பட்டது என்பதும் அறிய முடிந்தது. 

இந்த வீடியோ தொடர்பாக Navbharat Times என்ற  யூடியூப்  பக்கத்தில் மார்ச் 9, 2022 அன்று வாரணாசி பஹாரியா மண்டியில் EVM இயந்திரம்  தொடர்பாக சமாஜ்வாடி கட்சி ஊழியர்களிடையே இரவு முழுவதும் சலசலப்பு என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. 

அந்த வீடியோவின் நிலைத்தகவலில் (Description), EVM இயந்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு தெரியப்படுத்தாமல் கொண்டு சென்றதாக சமாஜ்வாடி கட்சியினர் குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட்டனர்.  இந்த தகவல் அறிந்ததும் அனைத்து அரசியல் கட்சியினரும் சம்பவ இடத்தில் திரண்டனர். இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பி உள்ளார் என்றுள்ளது.

இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மாவட்ட தேர்தல் அதிகாரி கவுஷல் ராஜ் சர்மா (Kaushal Raj Sharma), EVM ஒரு ​பயிற்சி நோக்கங்களுக்காக எடுக்கப்படுகின்றன என்று  நிர்வாகம் தெளிவுப்படுத்திய பிறகும், சமாஜ்வாதி கட்சியினர் ஒப்புகொள்ளவில்லை. இதனால் பார்வையாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யப்பட்டது. கொண்டு செல்லப்பட்ட இயந்திரங்களில் அரசியல் கட்சி சின்னங்களுக்கு பதிலாக ஆல்பா, பீட்டா, காமா போன்ற சின்னங்கள் எழுதப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்த இயந்திரங்கள் அனைத்தும் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று  விளக்கமளித்துள்ளார்.

மேலும் இது குறித்து தேடியதில், கவுஷல் ராஜ் சர்மா அளித்த விளக்கம் ANI எக்ஸ் பக்கத்திலும் 2022, மார்ச் 8ம் தேதி பதிவிட்டுள்ளது. 2022ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக பயிற்சி வழங்க கொண்டு செல்லப்பட்டதை, தற்போதைய தேர்தலுடன் தொடர்புபடுத்தி தவறான தகவலை பரப்புகின்றனர். 

முடிவு :

நம் தேடலில், EVM இயந்திரங்கள் பாஜகவை சேந்தவர்கள் கொண்டு செல்வதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. இது 2022ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச தேர்தலின் போது வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட இயந்திரங்கள். இது தொடர்பாக அப்போதே தேர்தல் ஆணையமும் விளக்கம் அளித்துள்ளது. 

Please complete the required fields.
Back to top button
loader