பண்ருட்டி – விழுப்புரம் சாலை மோசமாக இருப்பதாக ஹெச்.ராஜா பதிவிட்ட சீன வீடியோ!

பரவிய செய்தி

விடியா அரசு 

X link

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் பண்ருட்டி – விழுப்புரம் சாலை மிக மோசமாக இருப்பதாக பாஜகவைச் சேர்ந்த H.ராஜா-வின் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.  

Youturbe link

இதே வீடியோChennai Talkies’ என்ற யூடியூப் பக்கத்திலும் சில மாதங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். இதே வீடியோ ’Cinema tv’ என்ற யூடியூப் பக்கத்தில் ஜூலை 12, 2020 அன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், சீன சாலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வீடியோ Mirror தொழில்நுட்பத்தின் மூலம் வாகனம் செல்லும் திசை எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிந்தது. 

மேற்கொண்டு இந்த வீடியோ குறித்துத் தேடியதில், சீனாவை மையமாகக் கொண்டு செயல்படும் ’Bili Bili’ என்ற தளத்தில் ‘Xiaoqiang Brothers 123’ என்பவர் 2020, ஜூன் 30ம் தேதி பதிவிட்டுள்ளார். 

அதே இடத்தில் எடுக்கப்பட்ட வேறு சில வீடியோக்களும் வெவ்வேறு தினங்களில் அப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதைக் காண முடிகிறது. அப்படி 2020, ஜூன் 17ம் தேதி பதிவிட்டுள்ள வீடியோவில் ஒரு வாகனத்தில் சீன எழுத்துக்கள் இருப்பதையும் காண முடிகிறது.

பரவக் கூடிய வீடியோவின் மேலும் கீழும் உள்ள புகைப்படங்களையும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். மேலே உள்ள புகைப்படம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் உள்ள ராஜ்மஹால் சதுக்கத்தில் 2018-ன் போது எடுக்கப்பட்டது. கீழே உள்ள புகைப்படம் 2023, நவம்பர் மாதம் பெய்த மழைக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்டம்  களக்காடு பகுதியில் எடுக்கப்பட்டது. 

தற்போது தமிழ்நாடு எனப் பரப்பப்படும் வீடியோ இதற்கு முன்னர் மும்பை என சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டுள்ளது. ஆனால், இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை.

முடிவு: 

பண்ருட்டி – விழுப்புரம் சாலை மிக மோசமாக இருப்பதாக பாஜகவைச் சேர்ந்த H.ராஜா பதிவிட்டுள்ள வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை. இது சீனாவில் எடுக்கப்பட்டதாக 2020ம் ஆண்டு முதல் இணையத்தில் உள்ளது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader