” பிரதமர் வித்யலட்சுமி கார்யகிரம் ” மாணவர்களுக்கு பயனுள்ளதா ?

பரவிய செய்தி

+2 முடித்த பிறகு எந்தவொரு மேற்படிப்பிற்கு செல்வதாக இருந்தாலும் மத்திய அரசின் ” பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம் ” http//www.vidyalakshmi.co.in ” என்ற முகவரிக்கு சென்று தங்களுடைய விபரங்களை பதிவு செய்வதன் மூலம் மத்திய அரசின் உதவி கொண்டு எந்த தடையும் இன்றி கல்வி உதவித்தொகை பெற முடியும்.

மதிப்பீடு

சுருக்கம்

மாணவர்களின் மேற்படிப்பிற்கு வங்கிகளில் எளிதாக கல்விக்கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் மற்றும் முழுமையான விவரத்தை மத்திய அரசின் அமைச்சரவைகளின் கீழ் இயங்கும் வித்யலட்சுமி என்ற தளத்தின் மூலம் பெற முடியும். உடன் கல்வி உதவித் தொகை பற்றியும் அறிய முடிகிறது.

விளக்கம்

2015 ஆம் ஆண்டின் இந்திய சுதந்திர தினத்தில் வித்யலட்சுமி ( http//www.vidyalakshmi.co.in) என்ற இணையம் சார்ந்த தளமானது மாணவர்கள் கல்விக்கடன் நன்மை பெற அறிமுகப்படுத்தப்பட்டது.

Advertisement

நிதியியல் சேவைத் துறை, நிதிஅமைச்சகம், உயர்க்கல்வித் துறை,மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி NSDLe-Gov மூலம் உருவாக்கப்பட்டது மற்றும் பராமரிக்கப்படுகிறது.

பிரதான் மந்திரி வித்யலட்சுமி கார்யகிரம் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கடன்களுக்கு வழிவகை செய்வதன் மூலம் நிதி இல்லாமல் மாணவர்கள் மேற்படிப்பை தொடராமல் இருக்க கூடாது என்பதை நோக்கமாக கொண்டுள்ளனர் .

வித்யலட்சுமி தளத்தின் மூலம் மாணவர்கள் எளிதாக வங்கிகளின் கல்விக்கடன் திட்டங்களின் விவரங்களை அறியவும், விண்ணப்பங்களை பெறவும் முடியும். மேலும் அரசு உதவித் தொகையை பெற அணுக முடியும்.

இந்த வித்யலட்சுமி தளத்தில் 39 வங்கிகளின் 70 கல்விக்கடன் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய தளத்தில் பல வங்கிகளின் கல்விக்கடன் பற்றிய விவரங்கள்,விண்ணப்பம், விண்ணப்பித்த பின்னான கல்விக்கடனின் நிலை, அரசு உதவித்தொகை உள்ளிட்ட பலவற்றை பெற முடிகிறது.

Advertisement

http//www.vidyalakshmi.co.in என்ற தளத்திற்கு மாணவர்கள் சென்று விவரங்களை பூர்த்தி செய்து கல்விக்கடன் மற்றும் கல்வி உதவித்தொகை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளவும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button