விஜய் மல்லையா பாஜகவிற்கு 35 கோடி நிதி அளித்ததாக பரவும் போலி காசோலை !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
விஜய் மல்லையா பாரதிய ஜனதா கட்சிக்கு 35 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததாக ஆக்ஸிஸ் வங்கியின் காசோலை ஒன்றை சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பதை பார்க்க நேரிட்டது. கடந்த 2018-ல் கூட இந்த காசோலை இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
2016-ல் விஜய் மல்லையா பாஜகவிற்கு வழங்கியதாக வைரல் செய்யப்படும் காசோலையில் கட்சியின் பெயரே தவறாக இருக்கிறது. Bharatiya janata party என்பதற்கு பதிலாக Bhartiya janta party எனக் குறிப்பிட்டுள்ளது.
… 6/6 pic.twitter.com/yAaooMAo8i
— Vijay Mallya (@TheVijayMallya) June 26, 2018
அடுத்ததாக, விஜய் மல்லையா உடைய கையெழுத்தும் தவறாக இருக்கிறது. 2018-ல் ட்விட்டரில் வெளியிட்ட கடிதத்தில் விஜய் மல்லையாவின் உண்மையான கையெழுத்தை காணலாம்.
மேலும், காசோலையில் குறிப்பிட்ட 08-11-2016 தேதிக்கு முன்பாக மார்ச் மாதமே மல்லையா இந்தியாவில் இருந்து தப்பி சென்று விட்டார். காசோலையில், Glamour Steels private limited எனும் நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் இயக்குநர்கள் முகேஷ் குமார், அமித் குமார் சக்சேனா ஆவர்.
முடிவு :
நம் தேடலில், 2016-ல் விஜய் மல்லையா பாஜகவிற்கு 35 கோடி நிதியுதவி அளித்ததாக பரப்பப்படும் காசோலை ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட போலியான ஒன்று என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.