விண்வெளி பயிற்சிக்கு செல்லும் தேனி மாணவிக்கு ரூ.8 லட்சம் அளித்த விஜய் சேதுபதி !

பரவிய செய்தி

விண்வெளி பயிற்சிக்கு செல்லும் தேனி மாணவிக்கு ரூ.8 லட்சம் தந்து உதவிய நடிகர் விஜய் சேதுபதி, தேனி மாவட்டம் எம்.பி ஓ.பி.ரவீந்தரநாத் குமார் ரூ.3 லட்சம் அளித்து உதவியுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

விண்வெளி பயிற்சிக்கு போலந்து செல்லும் தேனி மாணவிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.8 லட்சம், தேனி மாவட்டம் எம்.பி ஓ.பி.ரவீந்தரநாத் குமார் ரூ.3 லட்சம் அளித்து உதவி உள்ளனர்.

விளக்கம்

தமிழ் வழிக்கல்வியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவி விண்வெளி பயிற்சிக்கு செல்வதாக வெளியான செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. தமிழ் வழியில் படித்து, அதிலும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவி அயல்நாட்டில் விண்வெளி பயிற்சிக்கு செல்வது பலரின் பாராட்டுகளைப் பெற்றது.

Advertisement

இந்தியாவில் உள்ள மாணவர்ளுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா அப்துல்கலாம் போன்று விஞ்ஞானியாக வேண்டும் என்ற எதிர்கால கனவுகள் இருக்கும். மாணவி உதயகீர்த்திகாவுக்கும் அதுபோன்ற கனவுகள் இருந்துள்ளது. தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் மகள் உதயகீர்த்திகா, அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்துள்ளார்.

கடந்த 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் இஸ்ரோ சார்பில் நடைபெற்ற விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரைக்கான போட்டியில் கலந்து கொண்ட உதயகீர்த்திகா மாநில அளவில் முதல் பரிசை பெற்றுள்ளார். கீர்த்திகாவின் ஆர்வத்தை புரிந்து கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் அவரை விண்வெளி சார்ந்து படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதன் பிறகு உக்ரைன் நாட்டில் உள்ள கார்கியூ நேஷனல் ஏரோ ஸ்பேஸ் பல்கலைக்கழத்தில் ஏர் கிராப்ட் மெயிண்டனஸ் படிக்க மாணவிக்கு இடம் கிடைத்தது. பலரின் உதவியால் தன் படிப்பினை 92.5 மதிப்பெண்களை பெற்று பமுடித்தார்.

இந்நிலையில், தற்பொழுது போலந்து நாட்டின் அனலாக் வானியல் பயிற்சி மையத்தில் போலந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, உள்ளிட்ட பிற நாட்டு விண்வெளி வீரர்களுடன் விண்வெளி குறித்த பயிற்சியில் ஈடுபடவும், அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெறவும் கீர்த்திகாவிற்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்த பயிற்சிக்காக சர்வதேச அளவில் 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில், இந்தியாவில் இருந்து கீர்த்திகா மட்டுமே தேர்வாகி உள்ளார்.

இதற்காக போலந்து நாட்டிற்கு சென்று மூன்று மாதங்கள் தங்கி பயிற்சியை மேற்கொள்ள தேவையான பொருளாதார வசதி அவர்களுக்கு இல்லை. ஆகையால், பலரும் தங்களால் முடிந்த உதவியை மாணவி கீர்த்திகாவிற்கு செய்து வருகிறார்கள். அதில், தேனி மாவட்டம் எம்.பி ஓ.பி.ரவீந்தரநாத் குமார் ரூ.3 லட்சம் அளித்து உதவி உள்ளார்.

Advertisement

நடிகர் விஜய் சேதுபதி மாணவி கீர்த்திகா மற்றும் அவரது தந்தை தாமோதரன் ஆகியோரை தனது அலுவலகத்திற்கு அழைத்து ரூ.8 லட்சம் அளித்து உதவியுள்ளார். விஜய் சேதுபதி படப்பிடிப்பு விசயமாக வெளியூர் சென்று இருப்பதால், அவரின் உதவியாளர்கள் ரூ.8 லட்சத்திற்கான காசோலையை மாணவி கீர்த்திகாவிடம் அளித்துள்ளார்.

பலரின் உதவிகளால் ” போலந்து ” நாட்டின் விண்வெளி பயிற்சிக்கு மாணவி கீர்த்திகா உற்சாகமாக பறக்க உள்ளார்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button