விகடன் நிறுவனத்தை பாஜக வாங்கியதாகப் பரவும் போலி ட்வீட்!

பரவிய செய்தி
தாமரை சொந்தங்களே திமுகவிற்கு முரசொலி, அதிமுகவிற்கு நமது அம்மா, நமக்கு விகடன் ஆம் விகடன் குரூப் இனி நம்முடையது நமக்கான அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வீடுதோறும் விகடன் வீடுதோறும் தாமரை – தமிழ்நாடு பாஜக.
மதிப்பீடு
விளக்கம்
விகடன் நிறுவனத்தை பாரதிய ஜனதா கட்சி வாங்கியதாக தமிழ்நாடு பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாக ட்வீட் படம் ஒன்று சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
True?😳🤔 pic.twitter.com/unf8aQEdxG
— 🏌️Dr.கார்த்திக் சுப்புராஜ்🏌️ (@KarthikSubbur11) March 31, 2022
உண்மை என்ன ?
விகடன் குழுமத்தை விலைக்கு வாங்கியதாக தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் அப்படி எந்த பதிவும் வெளியாகவில்லை. தமிழ்நாடு பாஜகவின் ட்வீட் ஒன்றில் விகடன் பற்றி எடிட் செய்து பரப்பி வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பாக, முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்திற்கு செல்லும் போது அணிந்து இருந்த ஜாக்கெட் 17 கோடி என வதந்தி பரப்பிய நபர் கைது செய்யப்பட்ட போது, விமர்சித்த நபர் கைது என ஜூனியர் விகடன் செய்தியில் வெளியிட்டது பல்வேறு விமர்சனங்களை பெற்றது.
மேலும் படிக்க : முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்ததால் இல்லை, போலிச் செய்தியைப் பதிவிட்டதால் பாஜக பிரமுகர் கைது !
இதையடுத்து, மாதம் 50 லட்சத்துக்கு ஆனந்த விகடனை அடகு வைத்த சீனிவாசன் என பதிப்பை நிறுத்திய இந்திய டுடே தமிழ் இதழ் அட்டையில் போலியான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.
மேலும் படிக்க : பதிப்பை நிறுத்திய இந்தியா டுடே அட்டைப் படத்தில் விகடன் பற்றி போலிச் செய்தி !
முடிவு :
நம் தேடலில், விகடன் நிறுவனத்தை பாஜக வாங்கியதாக தமிழ்நாடு பாஜக ட்வீட் செய்துள்ளது எனப் பரவும் ட்வீட் போலியானது என அறிய முடிகிறது.