நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் என வைரலாகும் புகைப்படம் உண்மையா ?

பரவிய செய்தி

நிலவின் தென் துருவத்தின் பரப்பில் உள்ள விக்ரம் லேண்டரின் அதிகாரப்பூர்வ முதல் புகைப்படம்.

மதிப்பீடு

விளக்கம்

நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கும் பொழுது அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆகையால், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை காண முடியாமல் போனது.

Advertisement

முதலில் விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் இல்லாமல் இருந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் இருந்த ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து உள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தகவல் தெரிவித்து இருந்தார். மேலும், விக்ரம் லேண்ட்ரை புகைப்படம் எடுத்து வருவதாகவும், கூடிய விரைவில் தகவல் தொடர்பை பெற முயற்சித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தான், நிலவில் இருந்து ஆர்பிட்டர் அனுப்பிய விக்ரம் லேண்டர் உடைய புகைப்படம் என சில புகைப்படங்கள் முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனினும், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் விக்ரம் லேண்டர் உடைய படங்கள் வெளியாகவில்லை.

வைரலாகும் புகைப்படங்கள் :

சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தில் நிலவில் இருக்கும் லேண்டர் ஆனது நாசா விண்வெளி மையம் அனுப்பிய அப்போலோ லேண்டர் தரை இறங்கியது மற்றும் மேற்பரப்பில் நகர்ந்து சென்ற புகைப்படங்கள் என்பதை உறுதி செய்ய முடிந்தது .

Advertisement

நாசாவின் Lunar Reconnaissance Orbiter (LRO) மூலம் நிலவின் மேற்பரப்பில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை நாசாவின் இணையதளத்தில் ” 10 Years Ago: Lunar Reconnaissance Orbiter Begins Mission to Map the Moon ” என்ற தலைப்பில் 2019 ஜூன் 19-ம் தேதி வெளியாகி இருக்கிறது. அதில், விக்ரம் லேண்டர் என வைரலாகும் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

சந்திராயன்-2 விண்கலத்தில் சென்ற விக்ரம் லேண்டர் என சமூக வலைதளங்களில் வைரலாக்கப்படும் புகைப்படங்கள் நாசாவின் அப்போலோ லேண்டர் உடைய புகைப்படம் மற்றும் நாசாவால் வெளியிடப்பட்ட புகைப்படங்களாகும்.

தவறான தகவல்களை பகிர வேண்டாம். விக்ரம் லேண்டர் உடைய புகைப்படத்தை இஸ்ரோ தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் அல்லது ஊடங்களில் வெளியிடுவர். அதுமட்டுமின்றி, இஸ்ரோ மூலம் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் தெர்மல் இமேஜ் மாறுபாடுகள் கொண்ட வண்ண புகைப்படமாக இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button