முதியோர் இல்லத்தில் எதிர்பாராமல் தன் பாட்டியை சந்தித்த சிறுமி. வைரலாகும் படங்கள்.!

பரவிய செய்தி
சமீபத்தில் பள்ளி ஒன்றின் சார்பாக முதியோர் இல்லத்திற்கு மாணவிகளை அழைத்து சென்ற போது ஒரு சிறுமி அங்கு தன் பாட்டியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். முன்னர் பெற்றோரிடம் பாட்டியை பற்றி அவர் கேட்டபோது, அவளுடைய உறவினர்களைச் சந்திப்பதற்காக சென்றுவிட்டதாக கூறி இருக்கின்றார் . இது போன்ற சமூகத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம்…
மதிப்பீடு
சுருக்கம்
பாட்டியும் பேத்தியும் இருக்கும் இந்த படம் 11 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. இந்த படத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் கதை உண்மை அல்ல.
விளக்கம்
நாகரீக மாற்றத்தில் இன்றைய தலைமுறையை சேர்ந்த சிலர் தன்னை வளர்த்து உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற பெற்றோர்களை எளிதாக முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் மன வேதனையில் மூழ்குவது முதியோர்களும், அவர்களின் பேரக் குழந்தைகளுமே..!
“ உலக புகைப்பட தினம் “ ஆகஸ்ட் 19-ம் தேதியன்று சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகிய புகைப்படம் ஒன்று பார்ப்பவர்களின் உள்ளதை உறைய வைக்கும்படியாக அமைந்துள்ளது.கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் பகிர்ந்திருந்தனர்.
இந்த படத்தில் சொல்லப்படும் கதை உண்மையா என தெரிந்துக்கொள்ள BBC பாட்டியுடனும் பேத்தியுடனும் நேர்காணல் நடத்தியது.
“ அகமதபாத்திலுள்ள முதியோர் இல்லத்தில் 2007 ஆம் ஆண்டு 11 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் “
பிபிசி செய்தியாளர் தேஜாஸ் உடன் ஒரு சிறப்பு உரையாடலில் பேத்தி பக்தி கூறியது : “என் பாட்டி வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறார். அவரை யாரும் இங்கு அனுப்பவில்லை.அவர் முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கிறார் என்பது எனக்கு தெரியும் அனால் அது எங்கே என்று எனக்குத் தெரியாது. அவர்களை பார்த்ததும் அழுகை வந்தது. அவரிடம் நெருக்கமாக இருப்பேன். இப்போது வரை என் பெற்றோரை விட இவரை அதிகமாக நேசிக்கிறேன் ”
அதிகமானோர் கேட்கும் கேள்வி இவரை ஏன் உங்கள் வீட்டிற்க்கு அழைத்து செல்லவில்லை என்று “அது தேவை இல்லை ஏனென்றால் அவர் இங்கே மகிழ்ச்சியாக இருக்கிறார். தினமும் அவருடன் பேசுவேன். என் பெற்றோரும் அவர்களை பார்த்து வருகிறார்கள். மக்கள் என் தந்தையை தவறாக புரிந்து வைத்துள்ளனர். அது உண்மை இல்லை. அது மாதிரி உண்மையில் நடந்து இருந்தால் என் அப்பாவிற்கும் எனக்கும் உறவு இருந்திருக்காது ”
பாட்டி தமயந்தி பென் கூறியது “நான் இங்கு என் விருப்பப்படி தங்கியிருக்கிறேன், எங்களிடையே எந்த வெறுப்பும் இல்லை, நான் வீட்டை விட்டு வெளியேற்றப்படவில்லை , நான் அமைதியாக வாழ விரும்பினேன், அதனால் நான் இங்கு வந்தேன்.”
“நான் வீட்டிற்கு போகிறேன், என் குடும்பம் இங்கே வருகிறது. நான் இங்கே அமைதியாக வாழ்கிறேன் வேறு எந்த விஷயமும் இல்லை என் பையன் தினமும் என்னிடம் பேசுகிறான் . காலை உணவு எடுத்து வருவார்கள் . ஒன்றாக இருந்தபோது எப்படி இணைப்பில் இருந்தோமோ அது போல் தான் அது இன்னும் இருக்கிறோம் . ”
பரபரப்பான செய்திக்காக தவறான செய்தியை உருவாக்குவது நியாயமில்லை . ஆனால் உணர்வுபூர்வமான நிகழ்வுகளுக்கு நம் நாட்டில் பஞ்சமேயில்லை. குடும்பத்தின் அருமையை பலரும் உணர இவ்வாறான நிகழ்வுகள் ஏதோ ஒரு இடத்தில் அடிக்கடி நடந்து கொண்டே தான் இருக்கிறது.