எடப்பாடியாராக மாறிய கிங் கோலி எனப் போலி நியூஸ் கார்டை பரப்பும் பாஜகவினர்

பரவிய செய்தி
எடப்பாடியாராக மாறிய ‘கிங்’ கோலி!
மதிப்பீடு
விளக்கம்
விராட் கோலி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இதயம் இன்னும் இளமையாக தான் இருக்கிறது (Dil toh baccha hai Ji) என்றுப் பதிவிட்டு குழந்தைகளுக்கான Climbing Games விளையாடுவதைப் போன்ற புகைப்படங்களைப் பதிவிட்டு இருந்தார். இதில் அவர் குனிந்து விளையாடுவதைப் போன்று அந்த புகைப்படங்கள் உள்ளது.
Dil toh baccha hai Ji 😃 pic.twitter.com/xGO3xscohq
— Virat Kohli (@imVkohli) April 16, 2023
எனவே இத்தோற்றத்தை கேலிச் செய்யும் விதமாக எடப்பாடியாராக மாறிய கிங் கோலி எனக் குறிப்பிட்டு சன்டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் “ஏய்.. ஈனா மீனா டீகா..!” எடப்பாடியாராக மாறிய ‘கிங்’ கோலி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி அண்ணா 😂🙏🙏🙏 pic.twitter.com/uIzCQwkPhP
— Johny Bhai 🇮🇳 (@Johni_raja) April 16, 2023
உண்மை என்ன?
பரவக்கூடிய “சன்டிவி” நியூஸ் கார்டு குறித்து அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடியதில், “குழந்தையாக மாறிய விராட் கோலி!” என்ற தலைப்பில் நியூஸ் காடு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
#Clicks | குழந்தையாக மாறிய விராட் கோலி!#SunNews | #ViratKohli | @imVkohli pic.twitter.com/m5tW1Tb3bQ
— Sun News (@sunnewstamil) April 16, 2023
அதில் ‘”ஏய்.. ஈனா மீனா டீகா..!” குழந்தையாக மாறிய ‘கிங்’ கோலி!‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக ‘எடப்பாடியாராக மாறிய ‘கிங்’ கோலி!’ என்று குறிப்பிட்டு எந்த நியூஸ் கார்டும் அவர்களது பக்கத்தில் பதிவிடப்படவில்லை. அது எடிட் செய்யப்பட்டது.
மேலும் படிக்க: விராட் கோலியைத் தொடர்ந்து ஷாருக்கான் தனது பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட்டதாகப் பரவும் பழைய புகைப்படம் !
சமீபத்தில் விராட் கோலியைத் தொடர்ந்து ஷாருக்கான் தனது பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட்டதாகப் பழைய புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டது குறித்தும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க: பெப்சி உடனான ஒப்பந்தத்தை கோஹ்லி நிறுத்திக் கொண்டார்.
முடிவு:
நம் தேடலில் “எடப்பாடியாராக மாறிய கிங் கோலி” எனப் பரப்பப்பட்ட சன் டிவி நியூஸ் கார்டு போலியானது. ‘குழந்தையாக மாறிய கிங் கோலி’ என்றுப் பதிவிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.