விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய அரிய காட்சியா?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய உரை காணக்கிடைக்காத அரிய வீடியோ…….தயவுசெய்து பகிருங்கள்
மதிப்பீடு
விளக்கம்
1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை அனைத்து மக்களையும் கவர்ந்த நினைவு. தன்னுடைய உரையின் தொடக்கத்தில் சகோதர , சகோதரிகளே எனும் விவேகானந்தர் உடைய வார்த்தைகளுக்கு கரகோஷங்கள் எழுந்தன.
சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையின் காணக்கிடைத்த காட்சி என ஓர் வீடியோ இந்திய அளவில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் மட்டுமல்ல கடந்த 2017-ம் ஆண்டில் இருந்தே இந்த காட்சிகள் பரவி வருகிறது. அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பதிவிட முயன்றோம்.
விவேகானந்தர் வீடியோ :
சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை எனப் பரவும் 2.56 நிமிடங்கள் வீடியோ குறித்து ஆராய்ந்தோம். அத்தகைய வீடியோவில் இடம்பெற்று இருப்பது பழமையான காட்சிகள் போல் இல்லை என்பதை மேலோட்டமாக கண்டாலே புரிந்து கொள்ளலாம்.
மேலும் , திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் போல் இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இதையடுத்து, ” vivekananda movie ” என்ற வார்த்தைகளை கொண்டு இணையத்தை ஆராய்ந்த பொழுது 2012-ல் வெளியான திரைப்படத்தின் வீடியோ நமக்கு கிடைத்தது.
அந்த திரைப்படத்தில் 13-வது நிமிடத்தில் விவேகானந்தர் சிகாகோவில் உரை ஆற்றுவது போல் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. அந்த காட்சிகளை எடுத்தே சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நமக்கு கிடைத்த ஆதாரத்தின் படி, விவேகானந்தர் வாழ்க்கை குறித்த திரைப்படத்தில் இருந்து சிகாகோ உரையை மட்டும் எடுத்து உண்மையான காட்சிகள் என தவறாக பகிர்ந்து வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது .
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.