அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண ரஷ்ய அதிபர் புதின் வருகையா ?

பரவிய செய்தி

2020 பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண்பதற்காக பிரதமர் மோடியும், ரஷ்ய நாட்டின் அதிபர் புதினும் மதுரைக்கு வருகை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதிப்பீடு

விளக்கம்

2020 ஜனவரியில் நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழாவை காண ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணைந்து வருகை தர உள்ளதாக வெளியான தகவல்கள் செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வைரலாகத் துவங்கின.

Advertisement

News archived link 

Facebook post archived link 

ஏற்கனவே, சீனத் தலைவர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நிகழ்ந்ததை அடுத்து, ரஷ்ய நாட்டின் அதிபர் உடனான சந்திப்பு மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியுடன் நிகழ உள்ளதாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இருப்பினும், வெளியாகி வந்த தகவலுக்கு தமிழக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தின் திருமங்கலம் தொகுதியில் வெற்றிப் பெற்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், ரஷ்ய அதிபர் புதின் வருகை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை எனத் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

இதையடுத்து, ரஷ்ய அதிபர் 2020 ஜனவரியில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருவதாக வெளியான செய்தியை சில ஊடகச் செய்திகள் நீக்கி வருகின்றனர். சிலர் மறுப்பு செய்தியையும், பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

PIB GUJARAT twitter post archived link 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை அடக்குவதை காண ஏராளமான மக்கள் நேரிலும், நேரலை செய்திகள் மூலமும் கண்டு வருகின்றனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் வாழும் தமிழர்கள் போராடத் துவங்கினர். அதில், வெற்றியும் கண்டனர்.

மக்களின் போராட்டங்களுக்கு பிறகே ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீது இருந்த தடை நீக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

சிறப்புமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டியை காண ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடி வருவதாக வெளியான உறுதிப்படுத்தாத தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. உண்மையான தகவலை அறிந்து பகிருமாறு ஃபாலோயர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button