வ.உ.சிதம்பரனார் ஐயா நடத்தி வந்த சுதேசிக் கப்பலா இது ?

பரவிய செய்தி

கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் ஐயா நடத்தி வந்த சுதேசி கப்பல். அரியப் புகைப்படம். அனைவருக்கும் பகிருங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

கடற்கொள்ளையர் பற்றி ஆங்கில மொழியில் எடுக்கப்பட்ட படத்தில் பயன்படுத்தியக் கப்பலே படத்தில் இருப்பது.

விளக்கம்

இந்திய சுதந்திரப் போராட்ட சுவடுகளில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. செக்கு இழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயே அரசுக்கு எதிராக கப்பல் நிறுவனத்தை நிறுவி அதை வெற்றிகரமாக இயக்கிவர். அதில் வெற்றியும் கண்டவர்.

Advertisement

கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் ஓட்டிய சுதேசிக் கப்பலின் அரியப் புகைப்படம் இதை அனைவருக்கும் பகிருங்கள் என புகைப்படம் ஒன்று சமீபத்தில் காண முடிந்தது.

Pirates :

1980 ஆம் ஆண்டில் Roman Polanski என்று இயக்குனர் கடலை மையமாகக் கொண்டு கடற்கொள்ளை மற்றும் புதையல் வேட்டை படமான “ Pirates “ என்ற படத்தை இயக்கினார். இதற்காக 17-ம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்பானிஷ் கப்பல் படத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது. இப்படத்தின் பட்ஜெட் 15 மில்லியன் டாலர் என தீர்மானித்தனர். ஆனால், படத்தின் பட்ஜெட் 40 மில்லியன் டாலர்க்கு உயர்ந்தது.

இறுதியாக pirates படம் 1986-ம் ஆண்டு cannes-ல் வெளியாகியது. அன்றைய காலத்திலேயே படத்தினை விளம்பரம் செய்வதற்காக படத்தில் பயன்படுத்திய கப்பல் பிரான்சின் cannes முதல் liguria-ன் genoa வரை பயணித்தது. படம் வெளியாகிய பிறகு பொருளாதார விதத்தில் தோல்வியை சந்தித்தாலும், சிறந்த costume design பிரிவில் Academy Awards-க்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Advertisement

“ Neptune என்று பெயர் கொண்ட இக்கப்பல் 1991-ல் பார்சிலோனாவில் பார்த்ததாக கூறப்படுகிறது. தற்போது இக்கப்பல் இத்தாலியின் Genoa-வில் உள்ள Porto Antico-ல் உள்ளது “.

சுதேசி கப்பல் நிறுவனம் தூத்துக்குடி முதல் கொழும்பு வரை மக்கள் பயணிப்பதற்காக, சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக 1907-ல் வ.உ.சிதம்பரனார் அவர்களால் நிறுவப்பட்டது. இதற்காக அவர் பலவற்றை இழந்துள்ளார். ஆனால், “ pirates “ படத்தில் பயன்படுத்தப்பட்ட கப்பலின் புகைப்படங்களை சுதேசிக் கப்பல் என நினைத்து பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

வ.உ.சி அவர்களின் தியாகத்திற்கு மரியாதை அளிக்கும் விதத்தில் இந்திய அஞ்சல்தலையில் அவரின் உருவம் பொறித்து வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button