This article is from Oct 04, 2018

தொண்டைப் புற்றுநோயாளிக்கு 50 ரூபாயில் குரல் கருவி: இந்திய மருத்துவர் சாதனை.

பரவிய செய்தி

பெங்களூரை சேர்ந்த விஷால் ராவ் என்ற இந்திய மருத்துவர் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பேசும்திறனைப் பெறுவதற்காக ரூ.50 விலையில் குரல் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். உலகமே வியக்கத்தக்க கண்டுபிடிப்பை நிகழ்த்திய மருத்துவரை இந்திய ஊடகங்கள் கண்டுக்கொள்ளவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

டிசம்பர் 25, 2015- ம் தேதியில் இருந்து, தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன்புபோல் நன்றாக பேசும்திறனைப் பெறுவதற்காக  50  ரூபாய் மதிப்புடைய குரல் கருவியை பெங்களூரை சேர்ந்த மருத்துவர் விஷால் ராவ் என்பவர் கண்டுபிடித்துள்ளார் என்று இந்தியாவின் அனைத்து ஊடகங்களிலும், இணையச் செய்திகளிலும் வெளிவந்துள்ளன.

விளக்கம்

தொண்டைப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயால் பலரும் பேசும் திறனை இழந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பேசும்திறனைப் பெறுவதற்காகப் பயன்படுத்தி வந்த குரல் கருவிக்கு நோயாளிகள் பல்லாயிரங்கள் செலவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை மாற்றி ரூ.50  என்ற மிகக் குறைந்த விலையில் ஓர் குரல் கருவியைக் கொண்டு தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன்புபோல் நன்றாக பேசும்திறனைப் பெறவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டவர் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர்.விஷால் ராவ்.

ஹச்.சி.ஜி என்ற புற்றுநோய் மையத்தில் புற்றுநோய் மற்றும் தலை, கழுத்து அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்.விஷால் ராவ் டிசம்பர் 2017-ல் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், ” நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது குரல் பெட்டி அகற்றப்பட்டு, அவர்கள் பேச இயலாத நிலையை அடைகின்றனர். நோயின் வலி மற்றும் நோயாளிகள் தங்களது குரலை இழப்பதும் ஒன்றாகி பெரும் துயரத்தை ஏற்படுத்தும். செயற்கையான குரல் பெட்டியின் சந்தை மதிப்பானது ரூபாய் 22,000 வரை விற்கப்படுகிறது. மேலும், கருவியின் விலை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே வருகின்றன. இத்தகைய விலையைக் கொடுத்து பயன்பெறுவது என்பது ஏழைகளால் முடியாத காரியம் ஆகும். எனவே, ஏழை நோயாளிகளின் குரல்களை மிகவும் குறைந்த விலையில் மீட்டுத் தருவதே என் நோக்கம். இக்கருவியானது நோயாளியின் கழுத்து வழியாக பொருத்தி உணவுக் குழலில் இணைக்கப்பட்டு ஓர் குரல் கருவியாக இயங்கும் ” என்றுக் கூறியிருந்தார்.

Youtube video | archived link  

திடீரென பேசும் திறனை இழப்பவர்களுக்கு மீண்டும் பேசும் திறனைப் அளிப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். எனினும், 1935 ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் இதற்கான தீர்வு காணப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

 ரூபாய் 50 என்ற மிகக் குறைந்த விலையில்,  வெறும் 25 கிராம் எடைக் கொண்ட செயற்கைக் குரல் கருவிக்கு “ ஓம் ” என்று பெயரிட்டுள்ளார். “ ஓம் ” என்பது பிரபஞ்சத்தில் அனைவராலும் உதிர்க்கப்படும் முதல் ஒலி ஆகும். இழந்த குரலை மீண்டும் பெறுவது ஓர் மறுபிறப்பு என்றும் கூறியுள்ளார் “.                               

மேலும், இக்கருவியை ஏழை மக்களுக்கு கொண்டு செல்லும் பொருட்டு அவரின் நண்பரான சாஸ்ஹன்க் மகேஷ் என்ற தொழிலதிபருடன் இணைந்து செயல்படப் போவதாகக் கூறியிருந்தார். இத்திட்டத்திற்கு “ ஒன் டாலர் வாய்ஸ் பாக்ஸ் ”  என்று பெயரிட்டிருந்தனர்.

ராமகிருஷ்ணா என்ற 55 வயதுடைய முதியவருக்கு புதிதாகக் கண்டுபிடித்த நவீனக் குரல் கருவியை பொருத்தி மீண்டும் பேசும் திறனை அளித்தத் தருணத்தில், அவர் வெளிபடுத்திய புன்சிரிப்பே எனக்கு மிகப்பெரிய பரிசு என்று டாக்டர் விஷால் ராவ் தெரிவித்திருந்தார். இவ்வாறு 2015-ல் இருந்து இந்தியாவின் பல்வேறு ஊடகங்கள், இணையச் செய்திகள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் டாக்டர்.விஷால் ராவ் மற்றும் அவரின் கண்டுபிடிப்புகள் பற்றி பல செய்திகள் வெளிவந்துள்ளன.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader