வயது வந்த அனைவரும் வாக்கு செலுத்த அம்பேத்கர் காரணமா ?

பரவிய செய்தி

VOTE என்ற ஆங்கில சொல்லின் விவாக்கம் என்ன தெரியுமா? Voice of tax payers everywhere என்பது தான். அதாவது வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்த அந்நாட்களில் அதனை மாற்றி ” வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை ” என போராடி வாக்குரிமை வாங்கி தந்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் தான் இந்திய அரசியல் அமைப்பின் மூலம் இந்தியாவை கட்டமைத்த இந்திய குடியரசின் தந்தை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்..

மதிப்பீடு

விளக்கம்

வாக்குரிமை என்பது வயது வந்த அனைவருக்கும் உரித்தான அடிப்படை உரிமை. அத்தகைய உரிமை கொண்டே நம்மை ஆளும் அரசு உருவாகிறது. எனினும்,அந்த அடிப்படை உரிமை அனைத்து தரப்பு மக்களுக்கும் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை.

Advertisement

1928 அக்டோபர் 23-ம் தேதி வளர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடுகளில் கூட போராடிக் கொண்டிருக்கும் கருத்தைப் பற்றி , இந்திய சட்ட அமைப்பு தோன்றுவதற்கு முன்பே டாக்டர்.அம்பேத்கர், தேர்தலில் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற உரிமை எதிர்கால இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அன்றைய காலகட்டத்தில், வாக்குரிமை என்பது பணம் படைத்த செல்வந்தர்கள், நிலம் உடையவர்கள், வரி செலுத்துவோருக்கு மட்டுமே இருந்து வந்தது. வாக்கு என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான ஆயுதமாகவும் , மக்களுக்கும் அரசியல் அறிவு வேண்டும் என கருதினார் அம்பேத்கர். மேலும், கைதிகள் , பழங்குடி மக்களுக்கும் வாக்குரிமை வேண்டும் எனவும், தீண்டத்தகாதவர்கள் எனக் கருத ப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களும் தேர்தலில் நிற்க அனுமதிக்கவும் வலியுறுத்தினார்.

1930 ஆம் ஆண்டில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் முயற்சி தோல்வி அடைந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற 1951-52 நாடாளுமன்ற மற்றும் மாநில தேர்தலில் , நிலம் உடையவர், இல்லாதவர், படிப்பு, சாதி , மதம் , ஆண் , பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான வாக்குரிமை சாத்தியமானது.

வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது சாத்தியமானதற்கு இந்திய அரசியல் அமைப்பின் தந்தை அம்பேத்கர் காரணம் என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரத்தில் VOTE என்பதற்கு voice of taxpayer everywhere என்பதற்கு பல விரிவாக்கங்கள் சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை votum என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து உருவானது. 15 நூற்றாண்டின் மத்தியில் இருந்து பயன்பாட்டில் உள்ளது.

Advertisement

எனினும், பிரிட்டிஷ் காலகட்டத்தில் வாக்குரிமை பணம் படைத்த , வரி செலுத்துவோருக்கு மட்டுமே இருந்தது உண்மையே.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button