போராட்டத்திற்கு சென்ற பெண்கள் மீது தண்ணீர் டேங்கர் மோதி பலி.. பாஜகவினரால் நிகழ்ந்ததா ?

பரவிய செய்தி

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்த டிராக்டரை வழி மரித்து திருப்பி அனுப்பிய போலீஸ்க்கு எதிராக வழிமரித்த பெண்கள் மீது ஈவு இரக்கம் இன்றி 5 பெண்கள் மீது டிராக்டர் ஏற்றி கொன்று குவித்த இட்லர் பிஜேபி அரசு.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

” டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக தண்ணீர் கொண்டு சென்ற டிராக்டரை காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக வழி மறித்து போராடிய பெண்கள் மீது டிராக்டரை விட்டு மோதி 5 பெண்களை பாஜக அரசு கொன்றதாகக் ” கூறும் நிலைத்தகவல் உடன் 1.35 நிமிடம் கொண்ட இவ்வீடியோ வைரலாக்கப்பட்டு வருகிறது. புஷ்பா ஹென்றிராஜ் என்பவரின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இவ்வீடியோ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Advertisement

கூட்டத்தில் புகுந்த தண்ணீர் டேங்கர் மோதி பெண்கள் படுகாயமடைந்த நிலையில், அந்த லாரி சிறிது தூரம் சென்று நின்று விட்டது. ஓட்டுநரை உள்ளூர் மக்கள் பிடித்து தாக்குகின்றனர். இந்த விபத்தை நிகழ்ந்தியது பாஜக எனக் கூறி இந்திய அளவில் பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ?  

போராடிய பெண்கள் மீது மோதிய தண்ணீர் டேங்கர் என கீவார்த்தைகளைக் கொண்டு தேடுகையில், ” பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர் பேரணியின் போது விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அமிர்தசரசின் வல்லா பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு அணிவகுத்து வந்த பெண்கள் குழு மீது தண்ணீர் டேங்கர் மோதியதில் இரண்டு பெண்கள் இறந்துள்ளனர் மற்றும் மூன்று பெண்கள் படுகாயமடைந்து உள்ளனர்.

Advertisement

ஓட்டுனரின் கட்டுப்பாடு இல்லாமல் ஓடிய டேங்கர் பெண்கள் மீது மோதியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை பிடித்து வல்லா காவல்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். போலீஸ் விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய நபரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என தெரிய வந்துள்ளதாக ” 2021 ஜனவரி 26-ம் தேதி அமர் உஜாலா எனும் இணையதள செய்தியில் வெளியாகி இருக்கிறது.

பஞ்சாப் வல்லா பகுதியில் நிகழ்ந்த விபத்தில் பெண்கள் இறந்தது தொடர்பாக NDTV, Zee, ANI உள்ளிட்ட செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது.

” விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வல்லாவில் நடைபெற்ற போராட்ட களத்திற்கு சென்ற 50,60 பெண்கள் மீது தண்ணீர் டேங்கர் மோதியது. கிராம மக்கள் ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் என நேரில் பார்த்த சாட்சிக் கூறியதாக ” ANI செய்தி முகமை வெளியிட்டு இருக்கிறது.

இந்த விபத்துக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாக பாஜகவினரை தொடர்புப்படுத்தி இந்திய அளவில் பரவியது. ஆனால், வல்லா காவல் நிலைய எஸ்.எச்.ஓ சஞ்சீவ் குமார் மற்றும் அமிர்தசரஸ் நகர சட்டம் மற்றும் ஒழுங்கு டிசிபி ஜகமோகன் சிங் ஆகியர் இருவருமே, ” விபத்து சம்பவத்திற்கு அரசியல் தொடர்பு இல்லை என்றும், டேங்கர் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாலே விபத்து நிகழ்ந்ததாக ” இந்தியா டுடேவிற்கு தெரிவித்து உள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தண்ணீரை கொண்டு சென்ற டேங்கரை திருப்பி அனுப்பிய போலீசின் செயலுக்கு எதிராக போராடிய பெண்கள் மீது டேங்கர் ஏற்றிக் கொன்று குவித்த பாஜக அரசு என பரவும் தகவல் தவறானது.

ஜனவரி 26-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் வல்லா பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு சென்ற பெண்கள் குழுவின் மீது கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் டேங்கர் மோதியே விபத்து நிகழ்ந்து இருக்கிறது. விபத்திற்கு அரசியல் தொடர்பில்லை என வல்லா மற்றும் அமிர்தசரஸ் போலீஸ் தெரிவித்து உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button