வாட்ஸ்சன் காலில் இரத்த காயம் | உண்மையா ?

பரவிய செய்தி
ஐபிஎல் இறுதி போட்டியில் காலில் இரத்தம் வருவதை கூட பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடிய வாட்சன்
மதிப்பீடு
விளக்கம்
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே மும்பை இடையே நடந்தது. இதில் பிரபல வீரரான வாட்சன் தனது காலில் கடுமையான காயம் ஏற்பட்ட பிறகும் விளையாடி கிரிக்கெட் ரசிகர்களை அசத்தினார் என்ற செய்தி வலம் வருகிறது.
உண்மைதானா என்று தேடி பார்க்கையில் ஹாட்ஸ்டார் ஆப்பில் ரத்தம் வழிய வழிய ஆடுவது தெளிவாக தெரிகிறது. அவர் பேண்ட் மீது ரத்தம் தெரிகிறது. இதை சிஎஸ்கே வின் ஹர்பஜன் சிங் அவர் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். ஆறு தையல் என குறிப்பிட்டுள்ளார்.
விளையாடும் போது டைவ் செய்த வாட்சனுக்கு கடுமையான காயம் ஏற்பட்டு விட்டது. ஆனால் தனது காயத்தை சொல்லி வெளியேறாமல் தொடர்ந்து கடுமையாக போராடி விளையாடியுள்ளார். அவர் அடித்த 80 ரன்கள் சென்னை அணிக்கு மிக முக்கியமானதாக இருந்தது. எட்டு முறை 4 ரன்களும், நான்கு முறை 6 ரன்கள் எடுத்திருந்தார்.
அவரின் சிறந்த ஸ்போர்ட்ஸ் மேன் ஸ்பிரிட் பாராட்டப்பட்டு வருகிறது. கோடிகளில் வாங்கிவிட்டு விளையாடுகிறார் என்ன பெருமை என்றும் சில கமெண்ட்டுகளை பார்க்க முடிகிறது. எது எப்படியோ அவருக்கு அடிபட்டது உண்மை விளையாடியது உண்மை.