பந்தை தொட்டால் வாட்ஸ் ஆப் ஹங் ஆவது ஏன் ?

பரவிய செய்தி

< Icon > இந்த பந்தை தொட்டால் உங்கள் வாட்ஸ் ஆப் உடனடியாக ஹங் ஆகி சில நொடிகள் வேலை செய்யாமல் இருக்கும்.

மதிப்பீடு

விளக்கம்

வாட்ஸ் ஆப் என்ற செய்திகளை பரிமாறிக் கொள்ளும் அப்ளிக்கேஷனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே எனலாம். மாதம் ஒன்றிற்கு 1.2 பில்லியனுக்கு அதிகமான பயனர்கள் உபயோகித்து வருகின்றனர். அன்ட்ராய்டு செல்போன்களைப் பயன்படுத்துபவர்களின் முக்கிய பொழுதுபோக்கு காரணியாக திகழும் வாட்ஸ் ஆப்-பில் பல முக்கிய செய்திகள் பகிர்ந்தாலும் , பல நேரங்களில் வதந்திகளும் அதிகளவில் பகிரப்படுகின்றனர்.

Advertisement

சமீபத்தில் வாட்ஸ் ஆப்-பில் எச்சரிக்கை செய்யும் விதத்தில் ஒரு செய்தி வலம் வருகிறது. கருப்பு நிற புள்ளி, டென்னிஸ் பந்து போன்ற எமொஜிகளுடன், இந்த பந்தை தொட்டால் உங்கள் வாட்ஸ் ஆப் உடனடியாக ஹங் ஆகி வேலை செய்யாமல் போய்விடும் என்ற செய்தி அனைவரது குரூப் மற்றும் தனிப்பட்ட நபருக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது. இந்த செய்தி பல மொழிகளில் வாட்ஸ் ஆப் மெசேஜ்களாக பரவி வருவதைக் காண முடிகிறது.

இந்த செய்தி எச்சரிக்கை செய்யும் விதத்தில் இருந்தாலும், பலரும் விளையாட்டுக்காக அந்த பந்தை தொட்டு பார்க்கவும் செய்கின்றனர். அப்பொழுது, வாட்ஸ் ஆப் செயல் இழந்து போய் விடுகிறது. இது உண்மை தான். வாட்ஸ் ஆப்-பில் பரவும் கருப்பு புள்ளி, பந்து, டென்னிஸ் பந்து போன்ற எமொஜியை தொடுவதால் வாட்ஸ் ஆப் மற்றும் மற்ற அப்ளிக்கேஷன் மட்டுமின்றி செல்போன் கூட ஹங் ஆகி நிற்கிறது. மேலும், பல செய்திகளில் இதில் வைரஸ் அல்லது வாட்ஸ் ஆப் பக் போன்ற ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வாட்ஸ் ஆப் ஹங் ஆகி நின்ற உடன் சிலர் போனை ரிஸ்டார்ட் செய்து பழையபடி உபயோகிக்கத் தொடங்கி விடுகின்றனர். எனினும், இது எவ்வாறு நிகழ்ந்தது என்று பலரும் அறியாமல் இருந்துள்ளனர். மேலும், இந்த மெசேஜ் வைரஸ் இருப்பதால் போனை ஹக் செய்கின்றனர் என்ற வதந்தியும் கூட பரவத் தொடங்கியுள்ளது.

பந்து அல்லது எமொஜியை தொடும் போது சில நொடிகள் வாட்ஸ் ஆப் ஹங் ஆகி நிற்கிறது, பின் “ WhatsApp isn’t responding “ என காண்பிப்பதை காண முடியும். வாட்ஸ் ஆப் ஹங் ஆவது எதனால் என்று ஒரு youtube வீடியோ பதிவில் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளனர். பந்து அல்லது எமொஜிக்கு அருகில் இருக்கும் (space) இடைவெளியில் பலhidden characters இருப்பதே அதற்கு காரணம் என்று கூறியுள்ளனர். அந்த சிறு இடைவெளியில் 5400க்கும் அதிகமானicon, emoji, characters போன்றவை ஹிட்டன் ஆகி உள்ளன. இவற்றுடன் வாட்ஸ் ஆப் செயல்பட முடியாததால் ஹங் ஆகி விடுகிறது.

whatsapp bomb

Advertisement

இருப்பினும், இந்த செய்தி மட்டுமின்றி பல மெசேஜ்கள் மூலம் பக் டிவைசை தாக்குவதும் நிகழ்ந்து வருகிறது. மேலும், வாட்ஸ் ஆப் இலவச மெசேஜ் பிளாட்பார்ம் என்பதால் மால்வர் மூலம் டிவைஸ் டார்கெட் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில் வாட்ஸ் ஆப்-பில், பயனாளர்களின் காலம் முடிவடைவதால் “ subscription has expired “ என்று கூறி செய்தி பரவி வந்தது. இவ்வாறு பரவிய செய்தியில் பயனாளர்கள் தங்களின் கணக்கை சரிபார்த்து மற்றும் 0.99 பவுண்ட்ஸ் செலுத்தி lifetime subscription பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இது போன்ற பல தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவது வாட்ஸ் ஆப்-பில் அதிகரித்து வருகிறது.

பந்தை தொட்டால் வாட்ஸ் ஆப் ஹங் ஆவது உண்மை என்றாலும் அதற்கு காரணம் அதில் மறைந்து இருக்கும் எமொஜி கேரக்டர்களே என தெரிந்துள்ளது. எனினும், இதுபோன்ற மெசேஜ்களை தொடுவதோ அல்லது பகிராமல் இருப்பதோ நல்லது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button