This article is from Sep 30, 2018

செல்போன் உரையாடலை ரெக்கார்ட் செய்யும் அரசு: வாட்ஸ் ஆஃப் வதந்தி..!

பரவிய செய்தி

நாளையில் இருந்து புதிய தகவல் பரிமாற்றம் கட்டுப்பாட்டை Ministry of interior regulation கொண்டு வர உள்ளது. அனைத்து தொலைபேசி அழைப்புகளும் ரெகார்ட் செய்யப்படும். ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்படுகிறது. உங்கள் device-கள் அனைத்தும் அமைச்சகத்தின் சிஸ்டம் உடன் இணைக்கப்பட்டு விடும். நீங்கள் அனுப்பும் வீடியோ, போட்டோ, செய்தி என அனைத்தும் பதிவு செய்து வைப்பர். ஆகையால், தேவையற்ற செய்திகளை அனுப்புவதை நிறுத்தி கொள்ளவும். இதை அனைவருக்கும் பகிரவும்.

மதிப்பீடு

சுருக்கம்

மக்களின் செல்போன் அழைப்புகள், சோசியல் மீடியாவில் பகிரும் செய்திகள் அனைத்தையும் அரசு ரெகார்ட் மற்றும் கண்காணிப்பு செய்வதாக பரவும் செய்திகள் வதந்தியாகும். அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் ஏதும் வெளியாகவில்லை. ஒருவேளை ரகசிய நடவடிக்கையாக இருந்தால் இதை பரப்பியவர் உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பார்.

விளக்கம்

2010-ல் வாட்ஸ் ஆஃப் சோசியல் மீடியா உடனடியாக மக்களை தொடர்பு கொள்ளும் வகையில் தொடங்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நண்பர்கள், குடும்பம், ஏன் அயல் நாடுகளில் இருப்பவர்களிடம் கூட எளிதாக தகவல் பரிமாற்றம் செய்ய பெரிதும் பயனுள்ளதாக இருந்தது.

ஆரம்பத்தில் போட்டோக்கள், வீடியோக்கள், செய்திகள், பேசுவதற்கும் என பல விதத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ் ஆஃப் தற்போது வதந்திகளின் உறைவிடமாக மாறியுள்ளது. தவறான புகைப்படங்கள், வீடியோக்களை இணைத்து வதந்திகள் அதிகம் பகிரப்படும் தளமாக வாட்ஸ் ஆஃப் மாறி விட்டது. சமீபத்தில், Ministry of interior regulation உங்களின் செல்போன் உரையாடல் மற்றும் சோசியல் மீடியா பதிவுகளை ரெகார்ட் மற்றும் கண்காணிப்பு செய்வதாகக் கூறி செய்தி வைரலாகி உள்ளது.

Ministry of interior regulation என்ற பிரிவே இந்தியாவில் இல்லை, இவை வாட்ஸ் ஆஃப் வதந்திகளை உருவாக்குபவர்களின் கட்டுக்கதை. Press information bureau மற்றும் The ministry of telecommunication ஆகியவற்றின் இணையதளத்தில் தேடுகையில், சோசியல் மீடியாவில் பரவும் செய்தி தொடர்பாக எந்தவொரு அறிக்கையோ அல்லது செய்தியோ வெளியிடவில்லை. வாட்ஸ் ஆஃப் இல் மட்டுமே இச்செய்தி வைரலாகி வருகிறது.

இந்திய அரசிலமைப்பு சட்டம் article 12-ன் படி, ஜனநாயக நாட்டில் ஒரு தனிப்பட்ட நபரின் செல்போன் உரையாடல் போன்ற தனிப்பட்ட விசயத்தை கண்காணிக்கவோ அல்லது ரெகார்ட் செய்யவோ கூடாது. எனினும், குற்றவியல் சம்பவங்கள், குறிப்பிட்ட நபரை பற்றிய ரகசியல் தகவல்களை தெரிந்து கொள்ள அவர்களின் உரையாடல் பதிவு செய்யும் நடவடிக்கைக் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

msg

” இந்த தகவல் ஊடகங்கள் மற்றும் அரசு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகவில்லை. ஒருவேளை ரகசிய நடவடிக்கை என்றால் வெளிப்படையாக மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவ்வாறு அரசு செய்யுமேயானால் ஜனநாயகம் என்ற வார்த்தை நாட்டில் இல்லாமல் போய்விடும்”.

இதேபோன்ற பதிவு 2012-ம் ஆண்டில் UAE அரசு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக மக்களின் உரையாடலை பதிவு செய்வதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியா மட்டுமின்றி UAE, கானா உள்ளிட்ட நாடுகளிலும் இதுபோன்ற செய்திகள் பரவி உள்ளன.

2017-ல் இதே போன்று மலேசியாவில் மக்களின் செல்போன் அழைப்புகள், சோசியல் மீடியாவில் பகிரும் செய்திகள் அனைத்தையும் அரசு ரெகார்ட் மற்றும் கண்காணிப்பு செய்வதாக பரவும் செய்திகள் வதந்தி என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மலேசிய உள்துறை அமைச்சகம் செயலாளர் அல்வி இப்ராஹிம், “ அமைச்சகத்தின் சார்பில் இவ்வாறான செய்தி வெளியாகவில்லை, இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்றதோடு, தவறான செய்திகள் வைரலாகி வருவதாக “ தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் ஏதும் வெளியாகவில்லை. ஒருவேளை ரகசிய நடவடிக்கையாக இருந்தால் இதை பரப்பியவர் உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader