வில் ஸ்மித் ஆஸ்கர் விருது பெற்றதை செந்தில்வேல் விமர்சித்ததாக பரவும் போலி ட்வீட் !

பரவிய செய்தி
உழைக்கும் மக்களின் குரலாக ஜெய்பீம் திரைப்படத்தில் ஒலித்த நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், ஹரித்வாரில் கங்கா ஆரத்தியில் பங்கேற்று முழு சங்கியாக மாறி விட்ட ஹாலிவுட் நடிகர் சனாதனவாதி வில் ஸ்மித்திற்கு கிடைத்திருப்பது வேதனை அளிக்கின்றது.
மதிப்பீடு
விளக்கம்
பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் வில் ஸ்மித் ” கிங் ரிச்சர்ட் ” எனும் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருதினைப் பெற்றார். இந்நிலையில், ” ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த சூர்யாவிற்கு ஆஸ்கர் விருது கொடுக்காமல், ஹரித்வாரில் கங்கா ஆரத்தியில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது கொடுத்தது வேதனையாக இருக்கிறது என ஊடகவியலாளர் செந்தில்வேல் ட்விட்டரில் பதிவிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
ஊடகவியலாளர் செந்தில்வேல் பெயரில் இயங்கும் @senthillvel79 எனும் போலியான ட்விட்டர் பக்கத்தில் இருந்து இப்படியொரு ட்வீட் வெளியிடப்பட்டு இருக்கிறது. அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் @senthilvel79 என்பதாகும்.
மேலும் படிக்க :ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் பரவும் போலிச் செய்தி, போலி ட்வீட் !
மேலும் படிக்க : எரிபொருள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என அண்ணாமலை கூறியதாகப் போலிச் செய்தி !
இதற்கு முன்பாக, செந்தில்வேல் பெயரில் இயங்கிய போலியான ட்விட்டர் பக்கத்தில் இருந்து தவறான கருத்துகளும், தமிழ்கேள்வி நியூஸ் கார்டு மூலம் போலியான செய்திகளும் பரப்பப்பட்டு இருக்கின்றன.
முடிவு :
நம் தேடலில், ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், ஹரித்வாரில் கங்கா ஆரத்தியில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு கிடைத்திருப்பது வேதனை அளிக்கின்றது என ஊடகவியலாளர் செந்தில்வேல் கூறியதாக பரவும் ட்வீட் போலியானது என அறிய முடிகிறது.