திமுக வழக்கறிஞர் வில்சன் 8 வழிச்சாலைக்கு ஆதரவாக ஆஜராகினாரா ?

பரவிய செய்தி

8 வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்யக் கூடாது. செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்ட திமுக நிலைய வழக்கறிஞர் வில்சனை திமுக எம்.பியாக தேர்ந்தெடுத்து இருக்கிறது.

மதிப்பீடு

விளக்கம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகும் வழக்கறிஞர் பி.வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவாக ஆஜராகி உள்ளதாக பழுவேட்டரையர் எனும் முகநூல் பக்கத்தில் ஜூன் 2-ம் தேதி பதிவிடப்பட்டது.

Advertisement

அந்த முகநூல் பக்கத்தில், ” 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக் கூடாது. செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்ட திமுக நிலைய வழக்கறிஞர் வில்சனை திமுக எம்.பியாக தேர்ந்தெடுத்து இருக்கிறது ” என இடம்பெற்று இருந்தது.

வழக்கறிஞர் பி.வில்சன் ஆகஸ்ட் 2012-ல் இருந்து 2014 மே வரையில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஃப் சௌத்இந்தியா ஆக பதவி வகித்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.

மேலும் படிக்க : வழக்கறிஞர் பி.வில்சன் கூடங்குளம், கெயில்-க்கு ஆதரவாக வாதாடினாரா ?

2014-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு தன் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. ஏப்ரல் 2019-ல் வெளியான எட்டு வழிச்சாலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பில் வழக்கறிஞர் பி.வில்சன் உடைய பெயர் இடம்பெறவில்லை.

Advertisement

தீர்ப்பிற்கு முன்பாக ஏப்ரல் 11-ம் தேதி, எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகியதாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை ஊடக செய்திகளில் வெளியாகியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வில்சன் சார்பில் திமுக வக்கீல்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், சென்னை-சேலம் 8 இடையேயான 8 வழிச் சாலை வழக்கில் திமுகவின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எந்த தரப்பினர் சார்பாகவும் ஆஜராகவில்லை என்ற தகவலை அறியாமல் அன்புமணி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அறிக்கையை திரும்ப பெறுவதோடு, அவர் மன்னிப்பு கோர வேண்டும் என நோட்டீஸ் மூலம் தெரிவித்து இருந்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவாக பி.வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகினார் என்பது தவறான தகவல். இது தொடர்பான ஏப்ரல் 2019-ல் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தவறான அறிக்கையை வெளியிட்டு வக்கீல் நோட்டீஸ் பெற்றார் என செய்திகளிலேயே வெளியாகி இருக்கிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button