வெற்றி மகிழ்ச்சியில் மெஸ்ஸியை கட்டிப்பிடித்த பெண்.. தவறான செய்தி வெளியிட்ட IBC தமிழ், Behindwoods !

பரவிய செய்தி

மெஸ்ஸியை மைதானத்தில் ஓடி வந்து கட்டியணைத்துக் கதறி அழுத தாய் – நெகிழ்ச்சி வீடியோ வைரல்…! 

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

டிசம்பர் 18, 2022 அன்று அர்ஜென்டினாவுக்கு பிரான்சுக்கும் இடையே FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த மெஸ்ஸியை நோக்கி ஒரு பெண் ஓடி வந்து கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை இருவரும் பகிர்ந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

Archive link 

Archive link 

அவ்வீடியோவில் இருப்பது லியோனல் மெஸ்ஸியின் தாய் செலியா மரியா குசிட்டினி (Celia Maria Cuccittini) என IBC தமிழ்நாடு, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், Behindwoods ஆகிய இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Archive link

உண்மை என்ன ?

பரவக் கூடிய  வீடியோவில் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் தாய் எனக் கூறப்படும் செய்தி குறித்து இணையத்தில் தேடினோம். இது குறித்து ‘The Sun’ என்ற இணையதளத்தில் 2022, டிசம்பர் 20ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Archive link 

அச்செய்தியின் தலைப்பில் Argentina cook’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது பெயர் அன்டோனியா ஃபரியாஸ் (Antonia Farias) எனக் கட்டுரையில் உள்ளது.

Archive link 

மேலும், மெஸ்ஸியின் தாய்  FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து இணையத்தில் தேடினோம். இது தொடர்பாக டிசம்பர் 20ம் தேதி ‘NDTV Sports’ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. “Lionel Messi Shares Emotional Hug With Mother After World Cup Win” எனத் தலைப்பிட்ட செய்தியில் மெஸ்ஸி தனது தாயுடன் இருப்பதைக் காண முடிகிறது. அதில் அவர் ஊதா நிற ஜெர்சி அணிந்திருக்கிறார். இதனை நியூஸ் 18 இணையதளத்திலும் காண முடிகிறது.

Archive link 

அர்ஜென்டினா இணையதளமான ‘La Nacion’-ல் 2022, டிசம்பர் 19ம் தேதி இது தொடர்பாக வெளியிட்ட செய்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் படித்தோம். லியோனல் மெஸ்ஸியை நெகிழ்ச்சியோடு கட்டிப்பிடித்த பெண் யார்? எனத் தலைப்பிட்ட அச்செய்தியில் அர்ஜென்டினா அணியின் சமையலர் அன்டோனியா ஃபரியாஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive link 

முடிவு : 

நம் தேடலில், அர்ஜென்டினா FIFA உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றதையடுத்து, அவ்வணியின் கேப்டன் மெஸ்ஸி தனது தாயுடனான நெகிழ்ச்சி வீடியோ என IBC தமிழ்நாடு, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், Behindwoods வெளியிட்ட செய்திகள் தவறானது. அதில் இருப்பது அர்ஜென்டினா அணியின் சமையலர் அன்டோனியா ஃபரியாஸ் என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader