பேருந்து ஓட்டுநர் இருக்கையை விட்டு இறங்க மறுக்கும் பெண்.. உண்மை சம்பவம் எனப் பரவும் காமெடி வீடியோ !

பரவிய செய்தி

அத வேற எங்கயாவது உக்காந்து ஓட்டவேண்டிது தான இங்கயேதான் உக்காரணுமாங்குது அந்தம்மா… பெரிய பஸ்ஸு, இதவிட அழகழகான பஸ்ஸுலாம் விட்டு உன்னோட வண்டில ஏறுனேன் பாரு.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பேருந்து ஒன்றில் இடமில்லாமல் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்ட பெண் ஓட்டுநரை வேறு இருக்கையில் அமர சொல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கிண்டலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

பேருந்தில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஓட்டுநருக்கு இடமளிக்காமல் அவரிடம் வாக்குவாதம் செய்யும் பெண்ணின் வீடியோவின் உண்மைதன்மையை குறித்து ஆராய்ந்த போது அந்த வீடியோ உண்மை சம்பவம் இல்லை என்பதை அறிய முடிந்தது.

இந்த வீடியோ கடந்த ஜூலை 2020 ஆம் ஆண்டு “AAI JI” எனும் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காமெடி குறும்படம். மேலும் அந்த வீடியோவின் தலைப்பு ஹிந்தியிலும், ஆங்கிலத்தில் மார்வாடி காமெடி, ஹேமா பிரஜபத் (Hema Prajapat) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹேமா பிரஜபத்தை பற்றி தேடியபோது அவர் ஒரு நடிகை என்பதும், இது போன்ற பேருந்து காமெடியில் நடித்திருக்கிறார் என்பதும் அறிய முடிந்தது.

மேற்கொண்டு தேடிய போது முகநூலில் ஹேமா பிரஜபத்தின் வேறொரு பேருந்து காமெடி வீடியோ HP Music & Films என்னும் முகநூல் பக்கத்தில் செப்டம்பர் 2020இல் பதிவேற்றம் செய்யப்பட்டுஉள்ளத.

முடிவு :

நம் தேடலில் பேருந்தில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஓட்டுனருக்கு இடம் அளிக்க மறுக்கும் பெண்ணின் வீடியோ உண்மையான சம்பவம் அல்ல. அது ஒரு நகைச்சுவை குறும்படம் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button