குடியுரிமை போராட்டத்தில் தாக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமா ?

பரவிய செய்தி

மகளே நீங்கள் சிந்திய இரத்தத்துக்கு இந்த காவி(லி)கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்..

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பொது மக்களும் போராட்டங்களை முன்னெடுக்கும் தருணத்தில் வன்முறை சம்பவமும், போலீஸ் தடியடியும் நிகழ்ந்து வருகிறது.

Advertisement

இப்படி போராடிய மாணவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இளம்பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முகம் முழுவதும் இரத்தமாய் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு உள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

அடிபட்டு முகத்தில் இரத்தத்துடன் இருக்கும் பெண் மற்றும் அவரை சுற்றி இருப்பவர்கள் யாரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் இல்லை. இன்னும் சொல்லபோனால், அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது இந்தியாவே இல்லை.

2005-ம் ஆண்டுபிப்ரவரி மாதம் jafariyanews என்ற ஷியா நியூஸ் இணையதளத்தில் முஹரம் பத்தாம் நாள் பண்டிகையில் “அஷுரா ” எனும் சடங்கின் போது ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், துருக்கி, லெபனான் உள்ளிட்ட நாடுகளின் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு பதிவாகி இருக்கிறது.

Advertisement

இந்தியாவில் தாக்கப்பட்ட மாணவர்கள் என பகிரப்படும் புகைப்படம் லெபனான் நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்று உள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு லெபனான் நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இந்தியாவில் போராட்டத்தில் அடிபட்டதாக தவறாக பகிர்ந்து வருகின்றனர்.

இளம்பெண் இரத்தத்துடன் இருக்கும் இதே புகைப்படத்தை கடந்த 2019 செப்டம்பர் மாதம் டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட பெண் என்றும், காஷ்மீரில் தாக்கப்பட்ட பெண் என்றும் தவறான செய்திகள் இந்திய அளவில் பிற மொழிகளில் பகிர்ந்து இருந்தன என்பதை நமது தேடலில் சில இணையதளங்களில் படிக்க முடிந்தது.

14 ஆண்டுகளுக்கு முன்பு லெபனான் எடுக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வைத்து இந்தியாவில் பல சம்பவங்களுடன் வதந்திகள் பரவி வருகின்றன. ஓர் புகைப்படத்துடன் அல்லது வீடியோ உடன் ஏதேனும் செய்திகள் வந்தால் உடனே பகிராமல் அதன் நம்பகத்தன்மையை மக்களே அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button