செல்போன் பேசிக் கொண்டே குழந்தையை மறந்த தாய்| வீடியோ உண்மையா ?

பரவிய செய்தி
தன் செல்ஃபோனை ஞாபகமாக எடுத்துக்கொண்டு, “ஒரு பொருளை” மறந்துட்டு போகுது..! அது என்ன பொருள்..? கலிகாலம்..!
மதிப்பீடு
விளக்கம்
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கையில் குழந்தை உடன் குழந்தையின் தாயை கத்தி அழைக்கிறார், செல்போன் பேசிக் கொண்டே சென்ற குழந்தையின் தாய் திரும்பி ஓடி வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்ற வீடியோ கடந்த சில தினங்களாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.
செல்போனை மறக்காமல் எடுத்துக் கொண்டு பெற்றக் குழந்தையை மறந்து விட்டு செல்லும் பெண் என அப்பெண்ணை வசைப்பாடத் துவங்கினர். வீடியோவில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் உண்மையா ? எங்கு நிகழ்ந்தது என்பது குறித்து அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.
இந்த சம்பவம் தமிழகத்தில் நிகழவில்லை, வடமாநிலத்தில் நிகழ்ந்தது என்பதை மேலோட்டமாக பார்க்கும் பொழுதே அறிந்து கொள்ள முடிந்தது. இதனை வைத்து தேடிய பொழுது ABP நியூஸ், Zee News உள்ளிட்டவையில் வைரல் செய்திகள் பிரிவில் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. இதைத் தவிர்த்து பல முகநூல் பக்கங்கள் மற்றும் யூட்யூப் சேனல்களில் பதிவாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
25 நொடிகள் மட்டுமே கொண்டே வீடியோவில் ஆட்டோ ஓட்டுநர் கையில் குழந்தையுடன் கத்தி கூப்பிட்டுக் கொண்டே வரும் பொழுது சுற்றி இருப்பவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வீடியோவில் 7-வது நொடியில் மரத்திற்கு பின்னால் இருப்பவர்களை பார்க்க முடிந்தது.
அதில், வீடியோ கேமராவின் ஸ்டாண்ட் உடன் ஒரு குழு இருப்பதை காண முடிந்தது. ஆக, வீடியோ ஷூட்டிங் செய்து கொண்டு இருக்கும் பொழுது அதனை வீட்டில் இருந்து ஒருவர் எடுத்த வீடியோவே வைரலாகி இருக்கிறது என்பதை உறுதி செய்ய முடிந்தது.
எங்கு நிகழ்ந்தது ?
Suting pic.twitter.com/AnWA60t5nU
— Aasif todia 🔵 (@aasiftodia) August 24, 2019
இதைத் தவிர்த்து, ஆகஸ்ட் 24-ம் தேதி ட்விட்டர் பயனர் Aasif Todia என்பவர் வைரலாகும் வீடியோவில் பதிவில், நடப்பது வீடியோ ஷூட்டிங் எனக் கூறி மற்றொரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். அதில், மரத்திற்கு பின்னால் கேமெரா உடன் இருப்பவர்கள் இடம்பெற்று இருக்கின்றனர்.
This man is an actor. Famous in gujarati theatres and also seen in Taarak mehta ka ooltah chashma many times. This must be some scene frm a tv/film.
— Hetal Oza (@hetal007_oza) August 23, 2019
Hetal Oza என்பவர் பதிவிட்ட ட்விட்டர் கமெண்டில், ” இந்த வீடியோ படத்தின் ஷூட்டிங், வீடியோவில் இருப்பவர் குஜராத்தி நடிகர் மற்றும் அவரை சீரியலில் பார்த்து இருப்பதாகவும் பதிவிட்டு இருந்தார்”. இந்த ஷூட்டிங் நாசிக் பகுதியில் எடுக்கப்பட்டு உள்ளது.
முடிவு :
நம்முடைய தேடலில், ஷூட்டிங் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த நபர் எடுத்த வீடியோவே தற்பொழுது வைரலாகிக் கொண்டிருக்கிறது. மேலும், ஆட்டோவில் குழந்தையை மறந்து விட்டு செல்போன் பேசிக் கொண்டு செல்வதாக வைரலாகும் வீடியோ ஷூட்டிங் காட்சிகளே.