இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக சிறையில் இருப்பது தமிழ்நாட்டில்தான் எனப் பொய் பரப்பும் ரங்கராஜ் !

பரவிய செய்தி

“ஒழுக்கம் எங்க இருந்து வரும்? உங்களுக்கு தெரியுமா? இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக சிறையில் இருப்பது தமிழ்நாட்டு சிறைகளில் தான். நாம எவ்ளோ Culture பேசுறோம். நாம எப்படிப்பட்ட பாரம்பரியம் பேசுறோம். இது record. இது புள்ளி விவரம். Crime Record Bureau-லயே இது சாதாரணமா வர்ற விஷயம். அப்போ என்ன சொல்லி குடுத்திருக்கோம் நாம? எல்லா இடத்துலையும் கொண்டு போய் வச்சாச்சு!” – ரங்கராஜ் 

Youtube link

மதிப்பீடு

விளக்கம்

கும்பகோணத்தின் பிரசிதி பெற்ற சரஸ்வதி கான சபாபின் 12 ஆம் ஆண்டு தொடக்க விழா சமீபத்தில் கும்பகோணம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் கடந்த ஏப்ரல் 09 அன்று நடந்தது. அந்த விழாவில் சிறப்புரையாற்றிய பத்திரிக்கையாளர் ரங்கராஜ், “அந்தக் கால ஆச்சாரம் தான் இந்தக்கால Covid Protocol” என்று தீண்டாமையை நியாயப்படுத்தும் விதத்தில் பேசியிருந்தார்.

இதற்கு கடுமையாக விமர்சித்து சமூக இடைவெளிக்கும், சாதிய தீண்டாமைக்கும் வித்தியாசம் தெரியாத ரங்கராஜ் பாண்டே என்று பொது மக்களால் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதே வீடியோவில் இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக சிறையில் இருப்பது தமிழ்நாட்டில்தான் என்று பேசியிருக்கிறார்.

உண்மை என்ன ?

பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பேசிய உரையின் அடிப்படையில் இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக சிறையில் இருப்பது தமிழ்நாட்டு சிறைகளில் தானா என ஆய்வு செய்து பார்த்ததில், National Crime Records Bureau (NCRB) வெளியிட்டுள்ள Prison Statistics India 2021-ன் தகவல் அறிக்கை கிடைத்தது.

அதில் 2019 – 2021 ஆம் ஆண்டு வரையிலான இந்தியாவில் இருக்கும் பெண் கைதிகளின் விவரங்கள் மாநில வாரியாக கொடுக்கப்பட்டிருந்தன. இதில் 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் இருக்கும் பெண் கைதிகளின் எண்ணிக்கை 743 ஆகவும், 2020ம் ஆண்டில் 632 ஆகவும் குறைந்தும், 2021 ஆம் ஆண்டில் 742 ஆகவும் உள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் இருக்கும் பெண் கைதிகளுக்கான சிறை இருப்பு எண்ணிக்கை (Female Available Capacity) 2021 ஆம் ஆண்டில் 2548 எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதையும் காண முடிந்தது. இதிலிருந்து 2548 இருப்பில் 742 இடங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன(Occupied) என அறிய முடிந்தது.

 

இந்த விவரங்களின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் இருக்கும் பெண் கைதிகளின் விவரங்களை மாநில வாரியாக தரவரிசைப்படுத்தியதில், உத்திரபிரதேசம் 4995 எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவதாக பீகார் 3067 எண்ணிக்கையுடனும், மூன்றாவதாக மத்திய பிரதேசம் 1892 எண்ணிக்கையுடனும் இருக்கின்றன. இதில் தமிழ்நாடு 742 எண்ணிக்கைகளுடன் 10வது இடத்தில் இருப்பதை அறிய முடிந்தது.

மேலும், National Crime Records Bureau (NCRB) வெளியிட்டுள்ள Prison Statistics India 2020 அறிக்கையின் அடிப்படையில் Women prisoners Occupancy Rate (All Jails except Women Jails) மதிப்பை சதவீத அடிப்படையில் கீழேக் காணலாம். இதில் தமிழ்நாடு 27 சதவீதங்களுடன் 26 வது இடத்தில் இருக்கிறது.

மேலும் படிக்க: தீண்டாமை கடைப்பிடிப்பதை நியாயப்படுத்தி பேசும் ரங்கராஜ் !

இதற்கு முன்னர், பத்திரிக்கையாளர் ரங்கராஜ், “அந்தக் கால ஆச்சாரம் தான் இந்தக்கால Covid Protocol” என்று தீண்டாமையை நியாயப்படுத்தும் விதமாக பேசியது தொடர்பாக நம் தளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முடிவு:

நம் தேடலில், இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக சிறையில் இருப்பது தமிழ்நாட்டில்தான் என்று பத்திரிக்கையாளர் ரங்கராஜ் கூறியிருப்பது தவறான தகவல் என்பதை National Crime Records Bureau (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் அறிய முடிகிறது.

கூடுதல் தகவல் : 

மேலும், National Crime Records Bureau (NCRB) வெளியிட்டுள்ள Prison Statistics India 2021 அறிக்கையின் அடிப்படையில் Women prisoners Occupancy Rate (All Jails except Women Jails) மதிப்பை சதவீத அடிப்படையில் கீழேக் காணலாம். இதில் தமிழ்நாடு 31.9 சதவீதங்களுடன் 23 வது இடத்தில் இருக்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni is working as a Sub-Editor in You Turn. She completed her Masters in History from Madras university. She holds her Bachelor’s degree in Engineering and holds a Bachelor’s degree in Tamil Literature. She is the former employee of IT Company. She currently finds the fake news in social media in order to verify the factual accuracy.
Back to top button