9969777888 எண் பெண்களின் பாதுகாப்பிற்கானதா ?

பரவிய செய்தி

பெண்கள் ஆட்டோ, டாக்ஸியில் ஏறும் முன்பு , அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 9969777888 என்ற எண்ணிற்கு sms மூலம் அனுப்பி வைக்கவும். GPS மூலம் அந்த வாகனம்  ட்ராக் செய்ய காவல்துறைக்கு உதவும். தனியாக பள்ளி செல்லும் மாணவிக்கும் பொருந்தும்.

மதிப்பீடு

விளக்கம்

தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை வெளியிட்டது என 9969777888 என்ற எண் ஆனது சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. தகவல் அறிவோம் என இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.

Advertisement

ஆனால், உண்மையில் அந்த எண் தமிழகத்தில் அல்லது இந்திய அளவில் பயன்பாட்டிற்கானது என்பது தவறான தகவலாகும். இதற்கு முன்பும் நரேந்திரமோடி படத்துடன், பெங்களூர், டெல்லி காவல்துறையினர் பெயரில் பரவி இருந்தது.

2014 மார்ச் மாதம் மும்பை நகரின் கூடுதல் காவல் ஆணையர் ராகேஷ் மரியா , பெண்களின் பாதுகாப்பிற்கு 9969777888 என்ற எண்ணை ‘ சர்வதேச பெண்கள் தினம்’ அன்று அறிமுகம் செய்தார். இந்த எண்ணிற்கு வாகனத்தின் எண்ணை எஸ்எம்எஸ் அனுப்பி ட்ராக் செய்யும் வகையில் ஏற்படுத்தி இருந்தனர் .

ஆனால், சரியான ஆதரவு இல்லாமல், அதிகம் பயன்படுத்தாமல் இருந்த காரணத்தால் 2017 மார்ச் மாதம் இந்த சேவை நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக, 9969777888 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பி யாரும் ஏமாற்றமடைய வேண்டாம். சரியான தகவல்களை பகிரவும்.

Advertisement
Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button