உடுப்பியில் பசுவின் உடலில் உலக வரைபடத்தின் தோற்றம்| ஃபேஸ்புக் வதந்தி.

பரவிய செய்தி
பசுவின் உடலில் உள்ள வரைபடம் உடுப்பியில் உள்ள இந்த பசுவின் உடல் முழுவதும். உலக வரைபடத்தின் தோற்றம் அச்சு மாறாமல் அப்படியே உள்ளது..!! இயற்கையின் அற்புதம் !!
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி காணப்படும் பசுவின் உடலில் உலக வரைபடத்தின் அச்சு தோற்றம் மாறாமல் அப்படியே இருப்பதாக பசுவின் புகைப்படம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அப்படியொரு பசு உடுப்பியில் இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பில் இருந்தே முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் பசுவின் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டவை. பசுவின் உடலில் உலக வரைபடம் இருப்பதாக போட்டோஷாப் செய்து புனிதமான பசு என பல மொழிகளில் வதந்தியை பரப்பி உள்ளனர்.
மாடுகளின் உடலில் உலக வரைபடம் இருப்பதாக போட்டோஷாப் செய்யப்பட்ட பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பரவத் தொங்கிய போட்டோஷாப் புகைப்படம் தற்பொழுது வரை வைரலாகி வருகிறது.