கன்னத்தில் அடி வாங்கிய நடிகை கங்கனா ரனாவத் எனப் பரவும் தவறான புகைப்படம்!

பரவிய செய்தி

ஜனநாயகத்திற்காக ஒரு சிறிய அடி..

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் ஒருவர், மண்டி தொகுதியில் வெற்றிபெற்ற நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததாகவும், விவசாயிகளை கங்கனா ரனாவத் அவமரியாதை செய்ததாலேயே அவ்வாறு தான் அறைந்ததாக அந்த பெண் காவலர் விசாரணையில் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கன்னத்தில் அடி வாங்கிய நடிகை கங்கனா ரனாவத் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் பெண் ஒருவர் கன்னத்தில் அறை வாங்கியதை தெளிவாகக் காட்டும் படி, கன்னத்தில் கை விரல்களின் தடங்கள் சிவப்பாக பதிந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.

Archive Link:

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்த சம்பவம் நடந்த அன்றே (ஜூன் 06) கங்கனா ரனாவத் இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதைக் காண முடிந்தது.

அதில், “எனக்கு ஊடகங்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. முதலில், நான் பாதுகாப்பாக இருக்கிறேன், நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் இன்று பாதுகாப்பு சோதனையின் போது செக்யூரிட்டி சோதனை முடிந்து நான் வெளியே வந்தபோது, ​​இரண்டாவது கேபினில் இருந்த பெண்மணி, அதாவது ஒரு சிஐஎஸ்எஃப் செக்யூரிட்டி ஊழியர் வந்து, என் முகத்தில் அடித்தார், ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது, ​​அவர் விவசாயிகளை ஆதரிப்பதாகக் கூறினார், நான் பாதுகாப்பாக இருக்கிறேன், ஆனால் பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து நான் கவலைப்படுகிறேன்” என்றும் அதில் அவர் பேசியிருப்பதைக் காண முடிகிறது.

ஆனால் அந்த வீடியோவில், பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது போன்றே, அடி வாங்கியிருப்பதற்கான சிவப்பு நிற கைத் தடங்களை அவர் முகத்தில் காண முடியவில்லை.

எனவே பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடினோம். Cool Marketing Thoughts என்ற இணையதளத்தில், Baygon’s Anti-Mosquito Spray என்ற கொசு மருந்து விளம்பரத்திற்காக பரவி வரும் அதே புகைப்படம் அங்கு பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

ஆனால் விளம்பரத்திற்காக பதிவு செய்யப்பட்ட புகைப்படத்தை முகம் தெரியாதவாறு, நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறை வாங்கிய புகைப்படம் என்று கூறி சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: கங்கனாவின் இரு ட்வீட்களை “வெறுப்பு பேச்சு விதிமீறல்” என நீக்கிய ட்விட்டர் !

இதற்கு முன்பும் கங்கனா ரனாவத் குறித்து பரவிய செய்திகளை ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.

முடிவு:

நம் தேடலில், சண்டிகரில் கன்னத்தில் அடி வாங்கிய நடிகை கங்கனா ரனாவத் எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் தவறானது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader