இமயமலையில் பனிமனிதனின் கால் தடமா ?

பரவிய செய்தி

இமயமலை பகுதியில் புராண விலங்கான பனி மனிதனின் 32 இன்ச் கால் தடத்தை கண்டுள்ளனர்..

மதிப்பீடு

விளக்கம்

சமீபத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இமயமலை பகுதியில் பனிமனிதனின் கால் தடத்தை கண்டதாக பதிவிட்ட ட்விட்டர் பதிவால் புராணக் கதைகள், செவி வழிக் கதைகளில் கேட்டு வந்த பனி மனிதர்கள் பற்றி பேசத் துவங்கினர்.

Advertisement

2019 ஏப்ரல் 29-ம் தேதி ADG PI – indian army ட்விட்டர் பக்கத்தில் , ” மக்காலு பேஸ் கேம் அருகே ஏப்ரல் 9 ம் தேதி இந்திய ராணவத்தின் மலையேற்ற பயணக் குழு புராண விலங்கான பனிமனிதனின்  32*15 இன்ச் கால் தடத்தை கண்டனர் ” எனப் பதிவிட்டு இருந்தனர்.

இதையடுத்து, தமிழ் செய்தி முதல் உலக செய்திகள் வரை இந்த பனி மனிதன் கால் தடத்தை பற்றிய செய்தி அதிகம் பரவியது.

இந்நிலையில்,  இன்று வெளியான செய்தியில் நேபாளம் இராணுவத்தினர் இந்திய ராணுவத்தின் ட்விட்டர் கூற்றை மறுத்துள்ளனர்.

நேபாளம் இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிக்யான் தேவ் பாண்டே ஹிந்துஸ்தான் டைம்ஸ்-யிடம், கால் தடத்தை கண்ட இந்திய ராணுவக் குழு உடன் எங்களின் இணைப்பு குழுவும் இருந்தனர். உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள முயன்ற போது , அப்பகுதியில் அடிக்கடி காணக்கூடிய பனி கரடி உடைய கால் தடம் என உள்ளூர் மக்கள் மற்றும் சுமை தூக்குபவர்கள் கூறியுள்ளனர்  ” எனத் தெரிவித்தார்.

நேபாளத்தின் பரூன் பள்ளத்தாக்கில் 35 வருடங்களாக பணியாற்றி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான டேனியல் டேய்லர் , ” அந்த குறிப்பிட்ட கால் தடம் இமயமலை கறுப்பு கரடி மற்றும் அதன் குட்டி உடையது ” என்றுள்ளார்.

Advertisement

ஆகையால், இமயமலையில் புராண விலங்கான பனி மனிதன் இருப்பதாக  பரவும் செய்திகளை மக்கள் பகிர வேண்டாம்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button