This article is from Apr 01, 2021

மொழி, தமிழக கோயில்கள் குறித்து யோகி ஆதித்யநாத் விமர்சித்ததாக வதந்தி !

பரவிய செய்தி

கோவில்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகக் கோவில்களில் ரயில் நிலையத்தைப் போல அனைவரும் வந்து போவதைக் காண முடிகிறது – யோகி ஆதித்யநாத்

Facebook link | Archive link 

மொழியிலிருந்து பழக்க வழக்கங்கள் வரை மாறுதல் தேவை. தமிழர்களுக்குத் தீவிரமாக ஹிந்து கலாச்சாரத்தைப் பயிற்றுவிக்க வேண்டும் – யோகி ஆதித்யநாத்

Twitter link | Archive link

தமிழகத்தின் மருத்துவ கல்லூரிகள் பாரத தேசம் முழுமைக்கானது. ஆகவே நீட் என்பது தேச வளர்ச்சியின் மைல்கல் – பிரதமர் மோடி

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பேச்சுகளுக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்து ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட பொய் செய்திகளும் அதிக அளவில்  பரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் எதிரான பொய் செய்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் பரப்புரைக்கு தமிழகம் வந்த உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மொழி மற்றும் தமிழக கோயில்கள், கலாச்சாரம் குறித்து பேசியதாக இரு ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகின்றன.

Facebook link | Archive link 

Facebook link | Archive link

இவ்விரு செய்தியை நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனமே போலியான நியூஸ் கார்டுகள் என பதிவிட்டு இருக்கிறது.

அடுத்ததாக, தமிழகத்தின் மருத்துவ கல்லூரிகள் பாரத தேசம் முழுமைக்கானது. ஆகவே நீட் என்பது தேச வளர்ச்சியின் மைல்கல் என பிரதமர் மோடி தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசியதாக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புதிய தலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்றும் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : பிரதமர் மோடிக்கே ஃபோட்டோஷாப் செய்திகள்.. அரசியல் பகடி வேலை !

இதற்கு முன்பாக, இதே நியூஸ் கார்டில் பிற போலி கருத்துக்களை எடிட் செய்து சமூக வலைதளங்களில் வைரல் செய்தது தொடர்பாகவும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : அனிதா நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தாரா ?

தமிழக தேர்தல் தருணத்தில் செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகளை தங்கள் கட்சி மற்றும் கொள்கைக்கு ஏற்றவாறு எடிட் செய்து போலியான செய்திகளை பரப்புவது மிகவும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, செய்தி நிறுவனத்தின் லோகோ உடன் தெளிவாக எடிட் செய்கிறார்கள். ஆகையால், செய்தியின் உண்மைத்தன்மை தெரியாமல் செய்திகளை பகிர வேண்டாம்.

Please complete the required fields.




Back to top button
loader