உபி-யில் “பெரியார் சிலையை” யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தாரா ?

பரவிய செய்தி
சாமி சிலைன்னு நெனச்சு பெரியார் சிலையை திறந்து வச்சு சாமி கும்பிட்ட உ.பி முதல்வர் யோகி ஆதித்தியநாத்.
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரியார் சிலையை திறந்து வைத்ததாக இப்புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2022 ஜனவரி 7-ம் தேதி அவைத்யநாத் ஜி மகாராஜ் உடைய உருவச் சிலையை திறந்து வைத்துள்ளதாக ” யோகி ஆதித்யநாத் உடைய ட்விட்டர் பக்கத்தில் அதே புகைப்படத்துடன் பதிவாகி இருக்கிறது.
जनपद गोरखपुर में आज राष्ट्रसंत ब्रह्मलीन महंत अवेद्यनाथ जी महाराज की प्रतिमा का अनावरण, 1,000 विद्यार्थियों को टैबलेट/स्मार्टफोन वितरण तथा जनपद सूचना संकुल, स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट के भवन व विभिन्न परियोजनाओं का लोकार्पण/शिलान्यास संपन्न हुआ है।
जनपदवासियों को बधाई! pic.twitter.com/RL1wWcW9tq
— Yogi Adityanath (@myogiadityanath) January 7, 2022
Advertisement
கோரக்பூர் மாவட்டத்தில் யோகி ஆதித்யநாத் தன்னுடைய அரசியல் குருவான மறைந்த அவைத்யநாத் மகாராஜ் உடைய திருஉருவச் சிலையை திறந்து வைத்ததோடு 1000 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கியதாக செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.