உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
இவர் தான் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். நாட்டின் நலத்திற்காக,தேச வளர்ச்சிக்கு எவ்வளவு தீவிரமாக ஆராய்ச்சி செய்கிறார் என்பதை பாருங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகக் கூறி இப்புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இதில், காவி வேட்டி அணிந்த நபர் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ளும் காட்சிகள் புகைப்படமாகவும், யோகி ஆதித்யநாத் உடைய புகைப்படமும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில்,கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியில் ஃபேஸ்புக் பக்கத்தில் இதே புகைப்படம் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு வெளியாகி இருக்கிறது.
மேற்கொண்டு தேடுகையில், 2018ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி Ishq Comedy எனும் யூடியூப் பக்கத்தில் ” Baba opened the nada best video 2018 ” என்ற தலைப்பில் புகைப்படத்தில் இருக்கும் காட்சிகளை கொண்ட வீடியோ வெளியாகி இருக்கிறது. இது சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட காமெடி வீடியோ என்பதை அறிய முடிகிறது.
2017ம் ஆண்டில் இருந்தே யோகி ஆதித்யநாத் பற்றி இப்புகைப்படம் பரவி உள்ளது. அச்சமயத்தில் இப்படத்தை பகிர்ந்த பெங்களூரைச் சேர்ந்த ஆர்வலர் பிரபா என் பெலவங்கலா என்பவர் மீது பாஜகவின் இளைஞரணி தரப்பில் காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டது தொடர்பாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : உயிரிழந்த ராணுவ வீரரின் சாம்பலை யோகி ஆதித்யநாத் நெற்றியில் பூசுவதாக பரவும் பொய் !
மேலும் படிக்க : யோகி ஆதித்யநாத் முதல்வரான பிறகும் அடிபம்பில் தண்ணீர் குடிப்பதாகப் பரப்பப்படும் பழைய புகைப்படம் !
இதற்கு முன்பாகவும், யோகி ஆதித்யநாத் பற்றி பரவிய பொய்கள் குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகப் பரவும் புகைப்படம் தவறானது. அப்புகைப்படத்தில் இருப்பது யோகி ஆதித்யநாத் அல்ல. சாமியார் பெண்களிடம் தவறாக நடப்பது போன்று எடுக்கப்பட்ட சித்தரிப்பு வீடியோவின் காட்சிகள் என்பதை அறிய முடிகிறது.