நோபல்பரிசு பெற்ற Yoshinori Ohsumi கண்டுபிடித்த முறை கேன்சரை குணப்படுத்துமா ?

பரவிய செய்தி

ஜப்பானை சேர்ந்த செல் உயிரியலாளர் Yoshinori Ohsumi “ Autophagy “ -ல் வல்லுநர். இவர் உலகின் சிறந்த விருதான “ நோபல்பரிசை “ மருத்துவத்திற்காக பெற்றுள்ளார். இன்று உலகில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படும் கேன்சரை குணப்படுத்துவதை கண்டுபிடித்து உள்ளார். எப்பொழுது நாம் தினமும் 10-12 மணி நேரம் வேகமாக செயல்படுகிறோமோ அப்பொழுது உடலில் ஏற்கனவே இருக்கும் ஆற்றல் முழுமையாக பயன்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் ஏற்படும் தீவிர பசியின் போது உடலில் உள்ள கேன்சர் செல்கள் உண்ணப்படும். ஆண்டிற்கு 20 நாட்கள் வேகமாக செயல்பட்டால் உடலில் இருக்கும் அனைத்து கேன்சர் செல்களும் கொல்லப்படும் என அவர் கூறியுள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்

மருத்துவத்துறையில் நோபல்பரிசு பெற்ற Yoshinori Ohsumi தன்னுடலின் ஒரு பகுதியை உண்ணுதல்( Autophagy ) என்பதின் வழிமுறையை கண்டறிந்து, செல்கள் தன்னுள் இருக்கும் ஊட்டச்சத்து இன்மை மற்றும் தொற்றை எவ்வாறு கையாளும் என்பதை விரிவாக தெரிவித்துள்ளார்.

விளக்கம்

ஜப்பானைச் சேர்ந்த Yoshinori Ohsumi டோக்கியோவில் உள்ள “ Tokyo Institute of Technology “ – ல் பணியாற்றி வருகிறார். 1974-ல் டோக்கியோவில் doctoral பட்டம் பெற்றார். செல் உயிரியலாளரான Yoshinori Ohsumi 1990 காலக்கட்டத்தில் இருந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Advertisement

2016-ல் Yoshinori Ohsumi உலகின் சிறந்த விருதான “ நோபல்பரிசை “ மருத்துவத்திற்காக பெற்றுள்ளார். Yoshinori Ohsumi செல்கள் தன்னுடலின் ஒரு பகுதியை உண்ணுதல்( Autophagy ) என்பதின் வழிமுறையை கண்டறிந்தது மருத்துவத் துறையில் சிறந்த கண்டுபிடிப்பாக காணப்படுகிறது.

Autophagy :

செல்கள் தன்னுடலின் ஒரு பகுதியை உண்ணுதல்( Autophagy ) நிலை புதிய செல்களின் பகுதிளுக்கு மற்றும் ஆற்றலுக்கு எரிபொருள் வழங்குகிறது. உடலில் இருக்கும் ஆற்றல் முழுமையாக பயன்பட்ட பிறகு உருவாகும் வெற்றிடத்தின் போது Autophagy செயல்படுகிறது. ப்ரோட்டின் குறைந்து உருவாகும் வெற்றிடத்தை லைசோசொம்ஸ்களின் கூறுகள் நிரப்புகின்றன. Autophagy-யின் போதே இந்த செயல்முறை நடைபெறுகிறது. தொற்றுக்கு பிறகு Autophagy ஆல் பாக்டீரியா மற்றும் வைரஸை அழிக்க முடியும்.

Advertisement

“ நம் உயிரணுக்களில் உள்ள லைசோசொம்ஸ்களின் கூறுகள் மறுபயன்பாட்டிற்காக உற்பத்தி ஆகின்றன. இதன் செயல்முறையின் வழிமுறைகள் முழுமையாக 1990-ம் காலக்கட்டத்திற்கு முன்பு வரை கண்டறியப்படாமல் இருந்துள்ளது. Yoshinori Ohsumi ஈஸ்ட்களை முன்மாதிரியாக வைத்த தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த போது Autophagy பற்றியும், அந்த செயல்முறையில் மரபணுக்கள் மிக முக்கியமானவை என்பதை கண்டறிந்துள்ளார் “.

“ நரம்பியல் நோய்கள், கேன்சர், பாரம்பரிய தோன்றல் காரணமாக ஏற்படும் ஊட்டச்சத்தின்மை மற்றும் தொற்றை செல்கள் எவ்வாறு கையாள முடியும் என்பதை பற்றி அறிந்து கொள்ளும் முழுமையான அடித்தளத்தை Yoshinori Ohsumi கண்டறிந்து கூறியுள்ளார் “.

செல்களின் Autophagy பற்றிய Yoshinori Ohsumi கண்டுபிடிப்பு மூலம் பார்கின்சன், டைப் 2 நீரழிவு நோய், பாரம்பரிய நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கேன்சரும் சேர்க்கப்பட்டுள்ளது. கேன்சரை குணப்படுத்தும் முறை ஏற்கனவே கண்டறியப்பட்டது. அறுவைசிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலம் கேன்சர் குணப்படுத்தபடுகிறது. இவர் ஆராய்ந்த autopaghy பல்வேறு வகையான நோய்களுகாகு தீர்வு கண்டுபிடிக்க உதவியாக இருப்பது மட்டுமில்லாமல் கேன்சர் சிகிச்சைக்கு உதவியாகவும் இருக்கும். கேன்சர் வந்தால் பயப்பட தேவையில்லை, அது குணப்படுத்தக்கூடியதே முறையான விழிப்புணர்வு மிக அவசியம்

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button