யூடியூப் சேனல்கள் “Press” என சொல்லக்கூடாது-மத்திய அரசு உத்தரவா ?

பரவிய செய்தி

யூடியூப் சேனல்களில் பணிபுரிபவர்கள் இனி Press, media என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

யூடியூப் சேனல்கள் தங்களை பிரஸ் , மீடியா என அடையாளப்படுத்திக் கொள்ள கூடாது என மத்திய அரசு புதிய அறிக்கையை வெளியிட்டதாக தமிழக முன்னணி செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அச்செய்தி முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவத் தொடங்கியது.

Advertisement

News link | archived link

செய்திகளில், ” மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணை அமைச்சர் கர்னல் ராஜவர்த்தன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொடர்பு அமைச்சகமான ஆர்என்ஐ-ல் பதிவு செய்துள்ள பத்திரிகை , ஊடகம் மற்றும் ரேடியோ நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே செய்தியாளர்கள், ஊடகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியும்.

யூடியூபில் செய்திகளை வெளியிடும் சேனல்களில் பணிபுரிபவர்களை செய்தியாளர்களாக அங்கீகரிக்கவோ மற்றும் தங்களை Press மற்றும் Media என அறிமுகம் செய்து கொள்வதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ” எனக் கூறியுள்ளதாக வெளியாகின.

Youtube link | archived link

Advertisement

இது தொடர்பான செய்திகள் கலைஞர் செய்தி, நியூஸ் ஜெ , தினமலர்  உள்ளிட்ட முன்னணி செய்தி தமிழ் ஊடகங்களில் வெளியாகி இருந்தன.

உண்மை என்ன ? 

” யூடியூப் சேனல்கள் பிரஸ் கிடையாது : மத்திய அரசு ” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்த தினமலர் செய்தி நிறுவனம் பிறகு தனது செய்தியை நீக்கி உள்ளது. எனினும், செய்திகள் தொடர்பாக சேர்ச் செய்யும் பொழுது செய்தி வெளியிட்டதை பார்க்க முடிகிறது.

அடுத்ததாக, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டதாக கூறும் செய்தி நிறுவனங்கள், அத்தகைய அறிக்கையை காண்பிக்காமல், செய்தியை மட்டுமே வசித்தும், பதிவிட்டும் உள்ளனர். மத்திய அரசின் இத்தகைய அறிவிப்பு குறித்து ஆங்கில ஊடகச் செய்திகளில் வெளியாகி உள்ளதாக தேடினோம், ஆனால் அப்படியொரு செய்தி வெளியாகவில்லை.

அடுத்ததாக, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறையின் இணை அமைச்சராக ராஜ்யவர்த்தன் சிங் பதவி வகிக்கிறார் எனக் கூறியதே தவறான தகவல். ராஜ்யவர்த்தன் சிங் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறையின் இணை அமைச்சராக 2014 முதல் 2018 மே மாதம் வரை மட்டுமே பதவி வகித்து உள்ளார். எனினும், 2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மத்திய அமைச்சரவை பதவியில் இருந்து விலக்கப்பட்டார். தற்பொழுது செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறையின் அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் உள்ளார்.

Ministry of Information and broadcasting உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமீபத்தில் வெளியான அறிவிப்புகளில் யூடியூப் தளங்கள் “பிரஸ்” எனக் கூறிக்கொள்ள கூடாது என புதிய அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

பொதுவாக, யூடியூப் தளங்கள் தங்களை பிரஸ் எனக் கூறிக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், மத்திய அரசின் தரப்பில் இருந்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி இருப்பதாக கூறுவது முற்றிலும் தவறான செய்தி.

முன்னணி செய்தி ஊடகங்களும் தவறான மற்றும் உண்மை பின்புலம் அறியாத செய்திகளை வெளியிட்டு வருவதை சமீபத்தில் பார்க்க முடிகிறது. இனி அதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, அதிக கவனம் செலுத்துதல் அவசியம்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close