ஒரே பாரதம் திட்டத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட காரணம் ?

பரவிய செய்தி

ஒரே பாரதம் திட்டத்தில் தமிழ் மொழிக்கு இடமில்லை, காரணம் அத்திட்டத்தில் இணைந்த மாநிலங்களின் மொழிகள் மட்டுமே இணையத்தில் இடம்பெறும். இந்த திட்டத்தில் தமிழ்நாடு இணைந்த பிறகு ஒரே பாரதம் தளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்படும்.

மதிப்பீடு

சுருக்கம்

மத்திய அரசின் “ ஒரே பாரதம் உன்னத பாரதம் “ திட்டத்தின் இணைய தளத்தில் தமிழ் மொழியை மட்டும் புறக்கணிக்கப்பட்டதுக்கு கூறும் கதைகளில் இவையும் ஒன்று.

விளக்கம்

மத்திய அரசின் ஒரே பாரதம் திட்டத்தின் இணைய தளத்தில் தமிழ் மொழி இடம் பெறாததற்கு தமிழ் ஆர்வலர்கள் பலர் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.எனினும், ஒரே பாரதம் திட்டத்தில் இணைந்தால் மட்டுமே அந்த தளத்தில் தமிழ் மொழியானது இடம்பெறும் என்று வந்ததிகளை சமூக வலைதளத்தில் சிலர் கூறியுள்ளனர்.

இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் நரேந்திர மோடி தலைமையிலான மோடி அரசு “ ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத்“ என்ற இணைய தளத்தை அறிமுகப்படுத்தினர். சர்தார் வல்லபாய் படேலை கௌரவிக்கும் வகையில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டதாக கூறிகின்றனர். “ ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத் “ என்பதற்கு ஒரு பாரதம் உன்னத பாரதம் என்று பொருள். நாட்டில் உள்ள பல்வேறு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும் படங்கள் இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றிருக்கும். இத்தளத்தில் மாநிலங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

 

இந்நிலையில், இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தின் விளம்பரத்தில்  ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் “ ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத் “ என்று இடம்பெற்றிருக்கும். ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியானது இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்டது. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை அடுத்து தமிழ் ஆர்வலர்கள் பலர் தங்கள் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.

முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பை சமாளிக்க பலர் சில கதைகளை கூறி வந்தனர். அவற்றில் ஒன்று தான் அத்திட்டத்தில் தமிழ்நாடு இணையவில்லை என்பதும். தமிழ் மொழி இடம்பெறாததற்கு வடிவமைப்பாளரின் தவறா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்று தெரியவில்லை.

எனினும், எதிர்ப்புகளை அடுத்து அந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் தமிழ் மொழியை இணைத்தனர். அதும் எவ்வாறு தெரியுமா, “ ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத் “ என்று ஹிந்தியிலேயே எழுதியுள்ளனர். “ஒரே பாரதம் உன்னத பாரதம் “ என்று எழுதாமல் ஹிந்தியை தமிழில் எழுதியை பலர் எதிர்க்கவும் செய்தனர். இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு தகுந்த மரியாதையைக் கொடுக்காமல் எவ்வாறு இவர்களால் தேசிய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட முடியும் என்று தெரியவில்லை.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button