யூடர்ன் கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு கேட்டதாக வதந்தியை பரப்பும் மாரிதாஸின் துணை பக்கங்கள்.

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
யூடர்ன் பக்கத்தில், இணையதளத்தில், யூடியூப் சேனலில் பொய் செய்திகள் குறித்த தெளிவை மட்டுமே மக்களுக்கு எடுத்துரைத்து வரும் பணியை செய்து வருவதை அறிவீர்கள். சமீபத்தில் கூட மாரிதாஸ் வெளியிட்ட நியூஸ்18 மோசடி இமெயில் குறித்த கட்டுரைகள், வீடியோக்களே யூடர்ன் வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனலில் வெளியான வீடியோவிற்கு எதிர்ப்புகள் வெளியாகி கொண்டிருக்கையில், கறுப்பர் கூட்டத்திற்கு யூடர்ன் ஆதரவு கேட்டதாக வீண் வதந்தியை மாரிதாஸின் துணை பக்கத்தில் பரப்பி வருகிறார்கள். யூடர்ன் லோகோ மற்றும் ஆசிரியரின் புகைப்படத்தையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இதுநாள்வரை கறுப்பர் கூட்டம் சர்ச்சை தொடர்பாக யூடர்ன் பக்கங்களிலோ அல்லது யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயனின் தனிப்பட்ட பக்கங்களிலோ எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை மற்றும் அது சார்ந்த எந்தவொரு பதிவும் வெளியிடவில்லை. இப்படி இருக்கையில், யூடர்ன் கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு கேட்பதாக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டமிட்ட வதந்திகளை பரப்பி வருகிறார்கள். யூடர்ன் ஃபாலோயர்கள் மற்றும் மக்கள் யாரும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.