யுவன் டி-ஷர்ட்டில் “சாதி வேண்டாம் போடா” என ஃபோட்டோஷாப் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அணிந்து இருக்கும் வெள்ளை நிற டி-ஷர்ட்டில் ” சாதி வேண்டாம் போடா ” என்ற வாசகத்துடன் பெரியாரின் புகைப்படம் இடம்பெற்றுள்ள இப்புகைப்படம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்டவையில் அதிகம் வைரலாகி வருகிறது. சாதிய முறைக்கு எதிரானவர்கள் யுவனின் இப்புகைப்படத்தை பகிர்ந்து அதே வாசகத்தை பதிவிட்டு வருகிறார்கள். பெரியாரின் புகைப்படம் இடம்பெற்றதால் பெரியாருக்கு எதிரான வாசகம் மற்றும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான வாசகத்துடன் யுவனின் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
Gethu ah … style ah … 💥💥💥#ஜாதி_வேணாம்_போடா 😎@thisisysr 😍🔥🔥🔥 pic.twitter.com/njKEHwZFVr
Advertisement— Kaajal Pasupathi (@kaajalActress) September 8, 2020
உண்மை என்ன ?
சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ” ஐ அம் தமிழ் பேசும் இந்தியன் ” மற்றும் நடிகர் ஷிரிஷ் ” ஹிந்தி தெரியாது போடா ” எனும் வாசகத்துடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து பேசுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டனர். இதையடுத்து, ” ஹிந்தி தெரியாது போடா ” என்ற வாசகம் சமூக வலைதளத்தில் வைரலாகி விவாதமாக மாறியது. அதே நேரத்தில், அவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் எழுந்தன மற்றும் ஹிந்திக்கு ஆதரவும் தெரிவிப்பவர்கள் தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பின.
👍🏼👍🏼👍🏼 https://t.co/DhwrfJK1ca
— Raja yuvan (@thisisysr) September 5, 2020
இதன் பிறகே, யுவன் ” சாதி வேண்டாம் போடா ” எனும் வாசகம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து இருக்கும் புகைப்படமும் பகிரப்பட்டு வந்துள்ளது. ஆனால், அந்த புகைபடம் ஃபோட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படமே. அப்படி எந்தவொரு புகைப்படத்தையும் யுவன் வெளியிடவில்லை.
யுவன் உடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் செப்டம்பர் 8-ம் தேதி வெளியான புகைப்படத்தில் ” சாதி வேண்டாம் போடா ” என்கிற வாசகத்தை பெரியார் புகைப்படத்துடன் வைத்து ஃபோட்டோஷாப் செய்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க : இந்தி தெரியாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பாஜக இளைஞரணி தலைவர் கூறியதாக வதந்தி !
இதேபோல், இந்தி மொழிக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்ட பாஜகவின் இளைஞரணி தலைவர் மற்றும் எச்.ராஜா பெயரில் தவறான தகவல்கள் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டு வைரலாகின.
மேலும் படிக்க : இந்துக்கள் இந்தியை எதிர்க்கமாட்டார்கள் என எச்.ராஜா கூறியதாக வதந்தி !
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.